நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத் தளம் (aavanaham.org) இன்று பொதுவில் வெளியிடப்படும் செய்தியைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.  நீண்ட காலம் எமது இலக்குகளில் ஒன்றாக இருந்த இந்தச் செயற்திட்டம் வெளிவருவது நூலக நிறுவன ஆவணப்படுத்தற் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றும். நூலக பல்லூடாக ஆவணகம் (Multimedia Archiving Platform) நூலக நிறுவனத்தின் பின்வரும் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றது. * ஒலிக் கோப்புக்கள் (audio), நிகழ்படங்கள் (video), ஒளிப்படங்கள் (photos), எண்ணிம ஆவணங்கள் (born… Continue reading நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

2017 வழிகாட்டுநர் சபை பங்கேற்பு அழைப்பு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் முதன்மை முடிவெடுக்கும் சபை வழிகாட்டுநர் சபை (Regulatory Board) ஆகும். இந்தச் சபை ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவு (Annual Plan and Budget) நிறுவனச் செயற்பாடுகள் தொடர்பான முடிவெடுத்தல் (Decision Making) வளந் திரட்டுதல் (Resource Mobilization) வியூகத் திட்டமிடல் (Strategic Planning) செயற்திட்டங்கள்/செயலாக்கங்கள் மேற்பார்வை (Process Oversight) உட்பட்ட பணிகளுக்குப் பொறுப்பானது. இந்தச் சபை சுமார் மாதம் இருமுறை அல்லது ஆண்டுக்கு 20-25 வரையான சந்திப்புக்களை மேற்கொள்ளும். இந்தச் சந்திப்புக்கள் நடைபெறும்… Continue reading 2017 வழிகாட்டுநர் சபை பங்கேற்பு அழைப்பு

நூலக நிறுவனத்தின் புதிய வலைத்தளம்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் புதிய வலைத்தளம் (noolahamfoundation.org/web) அண்மையில் வெளியிடப்பட்டது.  நூலக பங்காளர்கள் சுட்டிக்காட்டிய பல மேம்படுத்தல்களை இந்த புதிய வலைத்தளம் கொண்டுள்ளது. * பன்மொழி வலைத்தளம் – வலைத்தளம் தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்துள்ளது – multilingual website * நடமாடும் கருவிகளுக்கு ஏற்ற வடிவமைப்பு – responsive website * தொழில்சார் வடிவமைப்பு – professional design * உள்ளடக்க ஒழுங்கமைப்பு – improved presentation of the content, improved navigation இந்த வலைத்தளம் டூர்ப்பல்… Continue reading நூலக நிறுவனத்தின் புதிய வலைத்தளம்

நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந்திரட்டல்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவை (Annual Plan and Budget) முன்வைத்தும் அதற்குத் தேவையான வளங்களை வளந் திரட்டுதல் திட்டம் (Resource Mobilization Plan) ஊடாகவும் முன்னெடுக்கின்றது.  இந்தப் பொறிமுறை நூலக நிறுவனமயாக்கச் செயற்பாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.  நாம் இந்தப் பொறிமுறையை  நேர்த்தியுடன் கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல் தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் நூலக நிறுவனத்தின் பங்கேற்பாளரான… Continue reading நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந்திரட்டல்

புதிய தன்னார்வலர்கள் நூலகத்துடன் இணைவு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தினால் கடந்த பதினொரு வருடங்களாக உலகளாவியரீதியில் மேற்கொள்ளப்படும் இலங்கைத் தமிழ்பேசும் சமூகம் சார்ந்த ஆவணங்களை எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் செயற்பாடுகளுக்கு உலகம் பூராகவும் இருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் தொடர்ச்சியாக பலவழிகளில் பங்களிப்பு செய்துவருகின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களில் நூலக நிறுவனத்தினோடு பல புதிய தன்னார்வலர்களும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் இணைந்து கொண்டு, இலங்கை தமிழ்பேசும் சமூகம் தொடர்பான எண்ணிம ஆவணப்படுத்தலுக்கு பிரஞ்ஞை பூர்வமான தமது பங்களிப்பினை பலவழிகளிலும் செய்து வருகின்றனர். மேலதிக தன்னார்வலர்களின்… Continue reading புதிய தன்னார்வலர்கள் நூலகத்துடன் இணைவு

யாழ் அலுவலகத்துக்கு கொலம்பியா பல்கலையில் கலாநிதி படிப்பினை மேற்கொள்ளும் ‘மார்க் ப்ளம்போர்த்’ வருகை

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்துக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பினை மேற்கொண்டிருக்கும் ‘மார்க் ப்ளம்போர்த்’ மற்றும் மக்கில் பல்கலைக்கழகம், மொன்ராரியல் கனடாவில் முதுகலைமானி பட்டப்படிப்பினை மேற்கொண்டிருக்கும் ‘ஹரினா அற்ரொன்’ முதலியோர் வருகைதந்து, நூலக செயற்பாடுகளினைக் கேட்டறிந்ததுடன், சில எண்ணிம ஆவணப்படுத்தல் சார் இணைச் செயற்பாடுகளை நூலகத்துடன் இணைந்து மேற்கொள்ளவும் விருப்பம் தெரிவித்திருந்தனர். http://noolahamfoundation.org/wiki/index.php?title=News%2F2015%2F2015.09.01

ரொறான்ரோ தமிழ் தெரு விழாவில் நூலக நிறுவன அறிமுகப்படுத்தல்

Published on Author Noolaham Foundation

“தமிழ் பெஸ்ட்” என்ற ஓர் வீதித் திருவிழா கனடா ரொரன்றோவில் கடந்த மாதம் 29/08/2015, 30/08/2015 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. அதன் போது நூலக நிறுவனம் தொடர்பான பரப்புரையும் கனடா வாழ் நூலக தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனூடாக பலரும் நூலக நிறுவனத்தின் தன்னார்வப்பணிகளைப்பற்றியும் இதர செயற்பாடுகள் பற்றியும் அறிந்து கொண்டனர். இதன்போது நூலகத்தின் வெளியீடுகள் உட்பட்ட இதர ஆவணங்களும் ஓர் காட்சிக்கூடம் அமைத்துக் காட்சிப்படுத்தப்பட்டதுடன் நூலகத்தின் செயற்பாடுகள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரங்களும் அனைவருக்கும் வழங்கப்பட்டன. https://www.facebook.com/hashtag/tamilfestto?source=feed_text&story_id=1030599340304788