தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் அருண்மொழிவர்மன் ஆற்றிய உரை

Published on Author Noolaham Foundation

சமூகத்தினை நோக்கிய தசாப்தம் கடந்த பயணத்தின் தொடர்ச்சியில் “இலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஓர் எண்ணிம ஆவணக்காப்பகம்- “நூலக நிறுவனம்” கனடாவில் 09/05/2015 அன்று இடம்பெற்ற தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களின் ஆவண இறுவெட்டு வெளியீட்டு வைபவத்தில் நூலகத்தின் தனார்வலர்களின் ஒருவரான சுதர்சன் ஶ்ரீனிவாசன் (அருண்மொழிவர்மன்) அவர்கள், “நூலகத்துடன் உலகம் பூராகவும் பரந்து வாழும் தமிழ் பேசும் சமூகங்கள் இணைந்து பங்களிக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். நூலகத்துடன் அனைவரும் # அரிய பலஆவணங்களினைப் பகிந்தும், #… Continue reading தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் அருண்மொழிவர்மன் ஆற்றிய உரை

தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இளையதம்பி தயானந்தா ஆற்றிய உரை

Published on Author Noolaham Foundation

லண்டனில் 26/04/2015 அன்று இடம்பெற்ற, “தவில் மேதை தட்சணாமூர்த்தி” அவர்களைப்பற்றிய ஆவண இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் நூலக நிறுவனம் பற்றியதும், நூலக நிறுவனத்தின் சாதனைகள் பற்றியதுமான சிறப்பான உரை ஒன்று இளையதம்பி தயானந்தா அவர்களினால் ஆற்றப்பட்டது. அவர் தனது உரையில் நூலகம் நிறுவனம், இலங்கைத் தமிழ் பேசும் சமூகம் சார் 15,000க்கும் மேற்பட்ட எழுத்தாவணங்களை கடந்த 11 வருடங்களில் ஆவணப்படுத்தி உலகம் பூராகவும் இலவசமாக பகிர்ந்திருப்பதனை நினைவு கூர்ந்தார். மேலும் அவரது அவ்வுரையில் நூலக நிறுவனத்தின் அனைத்து… Continue reading தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இளையதம்பி தயானந்தா ஆற்றிய உரை

நூலக நிறுவனத்தின் அறிவுப் பகிர்தல் பாதையின் தொடர்ச்சி

Published on Author Noolaham Foundation

யாழ்/ தென்மராட்சி கல்வி வலயத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தென்மராட்சி கல்வி வலய பாடசாலை நூலகர்களுக்கான செயலமர்வு 04/07/2015 அன்று காலை 8.00மணி முதல் மாலை 4.30 மணி வரை சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. அந்நிகழ்வில் வளவாளர்களாக நூலக நிறுவன அலுவலர்கள் அழைக்கப்பட்டிருந்ததுடன் நூலக தன்னியக்கமாக்கல் மற்றும் எண்ணிம நூலகம் தொடர்பில் பூரண விளக்கத்தினை அளித்திருந்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட தென்மராட்சி கல்வி வலய ஆசிரியர்கள் பங்குபற்றி பயன்பெற்றதுடன் நூலக நிறுவனத்தினரின் செயற்றிட்டங்கள் தொடர்பில் தமது ஆதரவினை… Continue reading நூலக நிறுவனத்தின் அறிவுப் பகிர்தல் பாதையின் தொடர்ச்சி

நூலக நிறுவனத்தின் பதிப்புச் செயற்பாடுகள்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுவரும் நூலக நிறுவனம் அது சார்ந்த பதிப்பு முயற்சிகளையும் தொடங்கியுள்ளது என்பதனை அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். பின்வரும் வகையான பதிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட நூலக நிறுவனம் தீர்மானித்துள்ளது. 1. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நுற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதிகளிலும் வெளியாகிய நுல்களை ஆவணப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் சில மீள்பதிப்புக்களைக் வெளிகொண்டு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 2. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அதற்கு முன்னரும் வாழ்ந்த முக்கிய எழுத்தாளுமைகளுடைய தொகுப்புக்களை செம்பதிப்புக்களாக வெளிக்கொணர்வதற்கு… Continue reading நூலக நிறுவனத்தின் பதிப்புச் செயற்பாடுகள்

“பனையோலை” – ஆவணப்படுத்தல் செயலமர்வு

Published on Author Noolaham Foundation

நூலகத்தின் ஏற்பாட்டில் “பனையோலை – ஆவணப்படுத்தல் செயலமர்வு” 09.09.2012அன்று யாழ்ப்பாணம், ‘தொடர்பகம்’ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு நூலகம் நிறுவனத்தின் யாழ் இணைப்பாளர் திரு கே. கௌதமன் தலைமை வகித்தார். “இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணப்படுத்தலின் அவசியம்” என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கு. குருபரன், “இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணப்படுத்தல் சார்ந்து இன்றைய எமது நிலை” என்ற தலைப்பில் முனைவர் ஜெ. அரங்கராஜ், “சர்வதேச நியமங்களினுடனான உலக நாடுகளின் ஆவணப்படுத்தல்” என்ற தலைப்பில்… Continue reading “பனையோலை” – ஆவணப்படுத்தல் செயலமர்வு

ஈழநாதன் காலமானார் – துயர் பகிர்கிறோம்

Published on Author Noolaham Foundation

நூலகத் திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களுள் ஒருவரும் நூலக நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பாளருமான புவனேந்திரன் ஈழநாதன் அவர்கள் 30.09.2012 அன்று அகால மரணமடைந்ததை முன்னிட்டு நூலக நிறுவனம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. நூலகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டு தனது உழைப்பைச் செலுத்தியவர் ஈழநாதன் அவர்கள். மிகச் சிறிய அளவிலிருந்த நூலகத் திட்டத்துக்கு வளங்களைத் திரட்டியும் பெருமளவு பங்களிப்பாளர்களை இணைத்தும் அதன் செயற்பாடுகளைச் சாத்தியமாக்கியவர் ஈழநாதன். அவரது பங்களிப்பு கிடைக்காது போயிருந்தால்… Continue reading ஈழநாதன் காலமானார் – துயர் பகிர்கிறோம்

7ஆவது அகவையை பூர்த்தி செய்யும் நூலகத் திட்டம் – சேரன்

Published on Author Noolaham Foundation

நன்றி: கம்ப்யூட்டர் ருடே ஆடி 2011, இதழ் 10. இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கமற்ற தன்னார்வ முயற்சியான நூலகத்திட்டம் இவ்வருடத்துடன் தனது 7 ஆவது அகவையை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல் இலங்கை தமிழ் பேசும் மக்களின் 10,000 ஆவணங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது என்பது அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயமாகும். இனம் ஒன்று, தனது இருப்பை உறுதிசெய்வதும்,… Continue reading 7ஆவது அகவையை பூர்த்தி செய்யும் நூலகத் திட்டம் – சேரன்