நூலக நிறுவன வேலைவாய்ப்பு – கள ஆய்வாளர் / Field Researcher – இலங்கை முஸ்லிம் எப்ஃபமேரா தொகுப்பு

Published on Author Loashini Thiruchendooran

 

பணி வெற்றிடம்

நூலக நிறுவனமானது (noolahamfoundation.org) இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படுத்தும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.

2005 முதல் இலங்கையின் முதன்மையான தமிழ் எண்ணிம ஆவணக் காப்பகமாகத் திகழும் நூலக நிறுவனம் இதுவரை பல்வேறு செயற்றிட்டங்களூடாக 100,000 இற்கும் அதிகமான ஆவணங்களை எண்ணிம வடிவங்களில் பதிவு செய்துள்ளது. நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஏட்டுச் சுவடிகள், அழைப்பிதழ்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒலிப்பதிவுகள், நிகழ்படங்கள், வாய்மொழி வரலாறுகள் போன்ற சகலவிதமான ஆவணங்களையும் நூலக நிறுவனம் பதிவுசெய்து வருகிறது. அவ்வகையில் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான முதன்மையான உசாத்துணைத் திரட்டினை நூலக நிறுவனம் உருவாக்கியுள்ளது.

நூலக நிறுவனத்தின் சேகரிப்பு மேம்பாட்டுத் திட்டம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொது மக்களால் தங்கள் தகவல் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய பயன்படுத்தக்கூடிய வகையில் முக்கியமான தொகுப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. 

 

பணித்தலைப்பு  – கள ஆய்வாளர் 

பணிக்கான திட்டம்- இலங்கை முஸ்லிம் எப்ஃபமேரா தொகுப்பு

(Sri Lankan Muslim Ephemera Collection)

பணி இடம் –   மட்டக்களப்பு  

பணி வகை- முழு நேரம்

பணிக் காலம்- 1 ஆண்டு தேவை ஏற்படின் அதிகரிக்க முடியும்

 

கடைமைகளும் பொறுப்புக்களும்

  1. களப்பணியைத் திட்டமிடல், ஒருங்கிணைத்தல், செயல்படுத்தல்
  2. ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டு, சாத்தியமான காப்பக சேகரிப்புகளை அடையாளம் காணல்
  3. ஆவண காப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுதல் 
  4. திறந்த அணுகல் நெறிமுறைகளின் கீழ் எண்ணிமப்படுத்தல் மற்றும் பகிர்வதற்கான அனுமதிகளை (சேகரிக்கப்பட்ட ஆவணங்களுக்கு) பெறுதல்
  5. சர்வதேச நூலகம்/காப்பக தரநிலைகளுக்கு ஏற்ப திட்டம்/அறிக்கைகளை தயார் செய்தல்
  6. சேகரிப்புக்கான மெட்டாடேட்டாவை (Metadata) உருவாக்குவதற்கான பின்னணி ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல் 
  7. சரியான நேரத்தில் சேகரிப்புகளுக்கான முழுமையான மெட்டாடேட்டாவை தயார் செய்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் 
  8. ஆவணங்கள் சரியான நேரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதிசெய்யதல் 
  9. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள்/படைப்புகளின் தரத்தை உறுதி செய்யதல் 
  10. தேவைக்கேற்ப வாராந்த கூட்டம் மற்றும் மாதாந்த கூட்டத்தை ஏற்பாடு செய்து கூட்டத்தை நடத்துதல் 
  11. வாராந்த மற்றும் மாதாந்த அறிக்கை தயாரித்தல்.
  12. மெட்டாடேட்டா தொடர்பான பயிற்சிகளில் பங்கேற்றல் 
  13. திறன்கள் மற்றும் அறிவை வளர்த்துக் கொள்ள சனிக்கிழமை கலந்துரையாடலில் பங்கேற்றல்

 

கள ஆய்வாளருக்கான தகுதிகள்

  • சமூக அறிவியல் அல்லது மனிதநேயத் துறைகளில் எம்.ஏ. அல்லது பி.ஏ மற்றும் அதற்கு இணையான ஆராய்ச்சி அனுபவம்
  • சுயாதீன / கல்வி / பிற நிறுவன அடிப்படையிலான ஆராய்ச்சியில் 3-5 வருட அனுபவம்
  • வலுவான தரமான ஆராய்ச்சி அனுபவம்
  • MS Office தயாரிப்புகள், Google Workspace மற்றும் மீடியா தொழில்நுட்பங்களில் தேர்ச்சி
  • எழுத்து மற்றும் பேச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக இருத்தல்

 

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளோர் தங்களது சுயவிபரக் கோவையையும்   அறிமுகக் கடிதத்தினையும் noolahamfoundation@gmail.com என்ற முகவரிக்கு (Attention CEO – Application for Field Researcher – Sri Lankan Muslim Ephemera Collection) எதிர்வரும் செப்டம்பர் 14, 2022 அன்றோ அதற்கு முன்பதாகவோ அனுப்பி வைக்கலாம்.