புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப் பட்டறை (Photography Documentation : WORKSHOP)

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயன்முறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் தன்னார்வலர்களுக்கான புகைப்பட ஆவணமாக்கல் பயிற்சிப்பட்டறை நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 02 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை யாழ்ப்பாணம், சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும். இப்பயிற்சிப்பட்டறையில் சுரேன் போடோகிராஃப்பியின் நிறுவனரும் தகவல் தொழிநுட்பம் மற்றும் ஊடகக் கற்கைகள் விரிவுரையாளருமான சுரேந்திரகுமார் கனகலிங்கம் அவர்கள் வளவாளராக கலந்துகொள்வார்.

ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள கூகுள் படிவத்தை பூரணப்படுத்தவும்

https://forms.gle/C1oYpJqas4xZ7F8u5

WhatsApp Image 2023-03-30 at 09.04.52    WhatsApp Image 2023-03-30 at 09.04.53

இலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி நூலக நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நூலகத்தின் ஆவணக வலைத்தளத்தில் இதுவரை 5800+ இற்கும் மேற்பட்ட படங்கள் சேகரங்கள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் ஒளிப்படம், தபாலட்டை, ஓவியம், நிலப்படம் என பல்வேறு விதமான படங்கள் உள்வாங்கப்படுகின்றன.

படங்கள் சேகரம்

ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல, புகைப்பட ஆவணமாக்கலில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.