ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டத்தில் நூலக நிறுவனம் – 2023

Published on Author Loashini Thiruchendooran

ஏறாவூர் வாசிப்பு வட்டமும் ஏறாவூர் நகரசபையும் இணைந்து நடத்தும் ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம் 05ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஏறாவூர் வாவிக்கரையோரம் அமைந்துள்ள டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. தமிழ், முஸ்லிம், சிங்கள பாரம்பரிய கலைகள், புத்தக வெளியீடுகள், ஆய்வுக் கருத்தரங்குகள், திரையிடுதல், உரையாடல்கள், சிறுவர்களுக்கான தனி அரங்குகள், சமகால தமிழ், சிங்கள இலக்கியங்கள், சிங்கள சினிமாக்கள், சமூகங்களுக்கிடையிலான ஆரோக்கியமான உரையாடல்கள், வாசிப்பை மேம்படுத்தும் வகையிலான மாணவர்களுக்கான நிகழ்வுகள், பட்டிமன்றம், நாடகம், பாடல்கள், பல்கலைக்கழகங்களின் நிகழ்வுகள், பெண்கள் சார்ந்த நிகழ்வுகள், ஓவியம், புகைப்படக் கண்காட்சி, மலையக இலக்கியம், புலம்பெயர் இலக்கியம் எனப் பலவகையான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இப்புத்தகக் கொண்டாட்டத்தில் நூலக நிறுவனமும் கலந்து கொண்டுள்ளதை அறியத்தருகின்றோம். 

நூலக நிறுவனம் சார்பில் இந்நிகழ்வில் மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளதுடன் பார்வையாளர்கள் மத்தியில் நூலக நிறுவனம் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பு, முஸ்லிம் எஃப்பமேரா செயற்றிட்டம் பற்றிய விளக்கமளிப்பு, மாணவர்களுக்கு ஈ-பள்ளிக்கூடம் தொடர்பான விளக்கமளிப்பு, நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்பு மற்றும் இலங்கை முஸ்லிம்களின் துண்டுப்பிரசுரங்களை ஆவணப்படுத்தலுக்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

image1     image2

உங்களிடமுள்ள வாழ்த்துப்பாக்கள் (Celebratory Poems), வாழ்த்துச் செய்திகள் (Celebratory News), இரங்கற்பாக்கள், சமரகவிகள் (Sympathy Poem), பொது அறிவித்தல்கள் (General Announcements), பொது அழைப்பிதழ்கள் (General Invitations), திறந்த கடிதங்கள் (Open Letters), விளம்பரங்கள் (Advertisements), அரசியல் / தேர்தல் விஞ்ஞாபனங்கள் (Political/ Election Manifestos), தன்னிலை விளக்க கடிதங்கள் ( Self Explanatory Letters), தகவல் தெரிவித்தலின் பொருட்டு அநாமதிய பெயர்களில் வெளியாகும் பிரசுரங்கள் (Anonymous Notices) என்பவற்றை நேரடியாக கொண்டு சென்று கொடுத்து உடனடியாக எண்ணிமைப்படுத்தி மீள பெற்றுக்கொள்ள முடியும்.