நூலக நிறுவனத்தின் நலன்விரும்பிகளுள் ஒருவரான பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா அவர்கள், 15.12.2023 வெள்ளிக்கிழமை நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.
அவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நூலகச் செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் 2021 ஆம் ஆண்டிலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் தன்னார்வலராகச் செயற்பட்டுவரும் அவர், நூலகத்தின் “முஸ்லிம் ஆவணகம்” செயற்றிட்டத்திலும் பங்களிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலாய் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் அவர், நூலகத்திற்கு வருகை தந்திருந்தபோது, தனது சேகரிப்புகளிலிருந்து, இலங்கை, மலாய் ஜாவி சேகரிப்புகள் அடங்கிய 50 ஆவணத்தொகுப்புகளை நூலகத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாட்டிற்காக வழங்கியிருந்தார்.
நூலக நிறுவனம் சார்பில் நூலக பிரதம நிறைவேற்று அலுவலகர், எண்ணிமப் பாதுகாப்பு செயலாக்கக்குழு, எண்ணிம நூலக ஆவணகக்குழு மற்றும் ஏனைய நூலகப் பணியாளர்களும் இச்சந்திப்பில் பங்கு கொண்டனர்.