நூலக நிறுவனத்தின் தைப்பொங்கல் நிகழ்வும் 20ஆவது ஆண்டு ஆரம்பச் சந்திப்பும்

Published on Author Loashini Thiruchendooran

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும், தகவல் வளங்களை ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடும், 15 ஜனவரி, 2005 அன்று ஆரம்பிக்கப்பட்ட நூலக நிறுவனமானது, 147,353 ஆவணங்களுடனும், 5,357,037 பக்கங்களுடனும் தனது 20ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது.  

உலகவாழ் தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான ‘தைப்பொங்கல்’, ‘நூலக நிறுவனத்தின் 20ஆவது ஆண்டு ஆரம்பம்’ ஆகிய இரு நிகழ்வுகளும், யாழ்ப்பாணம் சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத் தலைமை அலுவலகத்திலும், மட்டக்களப்பு அரசடி நூலகக் கட்டிடத்தில் அமைந்துள்ள பிராந்தியப் பணிமனையிலும்  கடந்த 15 ஜனவரி, 2024 திங்கட்கிழமை அன்று சிறப்பாக இடம்பெற்றது.

நூலக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 19 ஆண்டுகள் பூர்த்தியாகிய நிலையில், நூலக நிறுவனத்தின் இதுவரைக்குமான அடைவுகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல், நேரடியாகவும்  நிகழ்நிலை (Zoom) வழியாகவும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினர்கள், நிறுவனப் பணியாளர்கள், நூலகத் தன்னார்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

www.noolaham.org எனும்  இணைய இணைப்பின் மூலமாக நூலகத்தினைப் பார்வையிட முடியும்.

image5 image1

image12 image16

image15 image19

image10 image8

image13 image9

image18 image4

image2 image14

image7 image6