20 ஜூலை 2024 , சனிக்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு இந்தியாவிலுள்ள Cognizant நிறுவனத்தின் EVP, Chairman and Managing Director ராஜேஷ் நம்பியார் , டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்கும் 99X தொழில்நுட்ப நிறுவனத்தின் Founder and Chairman மனோ சேகரம் , நூலக நிறுவனத்தின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு துறையின் Tech Infrastructure Management Process Mentor ராஜன் பாலா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இவர்கள் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள், அவை சார் அடைவுகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினர். நிறுவனத்தின் ஓலைச்சுவடிகள் செயற்றிட்டம் தொடர்பில் அதிக ஈடுபாட்டுடன் கேட்டறிந்து கொண்டதுடன், மீதரவு சார் செயற்பாடுகளுக்காகப் பாஷினி மென்பொருளைப் பயன்படுத்துவது தொடர்பிலும் பரிந்துரை செய்தனர்.
மேலும், நிறுவனத்தின் ஒவ்வொரு துறை சார்ந்தும் இடம்பெற்று வருகின்ற செயற்பாடுகள், அதிலுள்ள சிக்கல் நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். இவர்களுடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.