09.08.2024 அன்று காலை 10.00 மணி அளவில் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமான யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இல் நூலக நிறுவனமும் கலந்து கொண்டிருந்தது.
புத்தகத் திருவிழாவின் முதல் நாள்,
* பாடசாலை மாணவர்கள்,
* எழுத்தாளர்கள்,
* ஆய்வாளர்கள்,
* வாசகர்கள்
என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக நூலக நிறுவனத்தின் காட்சியறையில் 1900ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இதழ்கள், நூல்கள், பத்திரிகைகள் போன்ற சில அரிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகள், “ஈழத்து ஓலைச்சுவடி நூலகம்” செயற்றிட்டம் சார்ந்த தெளிவுப்படுத்தலும் அனைவருக்கும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நூலகப் பணியாளர்களால் விளக்கப்படுத்தப்பட்டது.
குறிப்பாக பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாமல் நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதிருந்த ஒரு சில ஆவணங்களுக்கான அனுமதியினை நேரடியாக பெற்றுக்கொள்ள முடிந்ததுடன் ஆவணப்படுத்தலுக்கான சில ஆவணங்களும் கிடைக்கப்பெற்றன.
நீங்களும் நூலக வலைத்தளம் ஊடாக இணையவழியில் 156,000 இற்கு மேற்பட்ட ஆவணங்களை இலகுவாகவும் இலவசமாகவும் பார்வையிட முடியும்.