2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் இரண்டாவது நாளில் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini Thiruchendooran
யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இன் இரண்டாவது நாளும், நூலக நிறுவனமானது ஆவணமாக்கல் முயற்சிகளை சமூகத்திற்கு அறியச் செய்யும் நோக்கில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது.
பெருமளவிலான சமூக ஆர்வலர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டிருந்ததுடன், நூலக நிறுவன காட்சியறையினையும் நேரடியாகப் பார்வையிட வந்திருந்தனர். வந்திருந்தோரில் அதிகமானோருக்கு நூலக நிறுவனம் மற்றும் www.noolaham.org வலைத்தளம் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தமை மகிழ்ச்சியளித்தது. மேலும், நூலக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே தேவையான ஆவணங்களை தரவிறக்கம் செய்து கல்வி மற்றும் ஆய்வுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதாகவும், “வாசிப்பிற்கும் தேடலுக்கு சிறந்த தளமாக இன்றைய தமிழ் உலகில் உலாவிக் கொண்டிருக்கும் சிறந்ததோர் தளம் நூலகம் வலைத்தளமாகும்” என்றவாறாக தங்களது பின்னூட்டலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
12
610
12 15
யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல், புத்தளம் என இலங்கை மட்டுமன்றி பிரான்ஸ், கனடா, நோர்வே என சர்வதேச ரீதியிலான நாடுகளிலிருந்தும் மக்கள் வருகை தந்திருந்ததுடன் குறிப்பாக, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த உதயன், ஈழநாடு, ஈழநாதம், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகள், ஞானம், கலைச்செல்வி, விவேகம், ஜீவநதி, விளக்கு, மல்லிகை, அறிவுக் களஞ்சியம் போன்ற சஞ்சிகைகளின் முதற் பிரதிகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டனர்.
2021
32 29
45 47
அத்துடன் நூலகத் தன்னார்வலர்களின் உதவியுடன் ஒரு சில ஆவணங்களுக்கான பதிப்புரிமையாளர் அனுமதியினை நேரடியாக பெற்றுக்கொள்ள, இப்புத்தக திருவிழா ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது.
49 52
நீங்களும் இலங்கை தமிழ் சமூகம் சார் ஆவணங்களை நூலக வலைத்தளத்தில் பார்வையிட முடியும்.