20 ஆகஸ்ட் 2024, செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு நூலக நலன்விரும்பிகளாகவும் பங்களிப்பாளர்களாகவும் திகழ்கின்ற பத்மகரன் பத்மநாதன் (ஜேர்மனி), துஷாந்த் தெய்வேந்திரம் (அவுஸ்திரேலியா) ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இவர்கள் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினர்.

மேலும், நிறுவனத்தின் புகைப்படக் கருவி மூலமான எண்ணிமப்படுத்தலை நேரடியாகப் பார்வையிட்ட பத்மகரன், இச்செயற்பாடுகளுக்கென 600D புகைப்படக் கருவி ஒன்றை அன்பளிப்பு செய்திருந்தார்.