இலங்கைத் தமிழர்களினதும் தமிழ் நிலத்தினதும் ஆவணங்களை பேணிப்பயன்படுத்தும் எண்ணிம நூலகத் திட்டம்

Published on Author Noolaham Foundation

By பேராசிரியர் இரா சிவசந்திரன் நூலக நிறுவனம் (www,noolahamfoundation.org) மின்நூல் உருவாக்கத்தினைப் பரவலாக்கும் பணிகளை யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இப் பணியை மேற்கொள்வதற்கான வளவாளர் பயிற்சி வகுப்புகள் 15.02.2011 செவ்வாய் முதல் மூன்று நாட்களுக்கு வண்ணார்பண்ணை இரத்தினம் வீதியில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாணப் பிரதேச இணைப்பாளராகப் பணியாற்றும் பேராசிரியர் இரா சிவசந்திரன் தமிழர் எண்ணிம நூலகத்தின் தேவை, வலைத்தளத்தின் வரலாறும் செயற்பாடும், அதன் பயன்கள், எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் இப் பாரிய… Continue reading இலங்கைத் தமிழர்களினதும் தமிழ் நிலத்தினதும் ஆவணங்களை பேணிப்பயன்படுத்தும் எண்ணிம நூலகத் திட்டம்

2010 இல் 3,109 மின்னூல்கள்

Published on Author Noolaham Foundation

நூலகத் திட்டமானது ஈழத்து எழுத்தாவணங்களை எண்ணிமமாக்கி இணையத்தினூடாகக் கிடைக்கச் செய்யும் செயற்றிட்டமாகும். அது 2010 இல் 3109 அச்சாவணங்களை ஆவணப்படுத்தியுள்ளது. இது 2009 இல் ஆவணப்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் 142 % ஆகும் என்பதோடு ஓராண்டில் ஆவணப்படுத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையுமாகும். 2010 இல் நூலக நிறுவனமானது வாசிகசாலை எனும் செயற்றிட்டத்தினூடாக நேரடியாக மின்னூலாக்கத்தில் ஈடுபட்டது.  இதுதவிர நூலகத் திட்டத்துக்கான நிதியுதவிகளும் எதுவித தடைகளுமில்லாமல் வழங்கப்பட்டன. 2010 இல் நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டத்தினூடாக சரிநிகர், நிகரி, தினமுரசு, திசை,… Continue reading 2010 இல் 3,109 மின்னூல்கள்

நூலகம்: ஏழு மில்லியன் பக்கப் பார்வைகள்

Published on Author Noolaham Foundation

தமிழ் எண்ணிம நூலக (www.noolaham.org) வலைத்தளம் இன்றுடன் (11.01.2011)  ஏழு மில்லியன் தடவைகளுக்குமேல் பார்வையிடப்பட்டுள்ளது. இது சுமார் 3 ஆண்டுகள், நான்கரை மாதங்களுக்கான புள்ளிவிபரம் ஆகும். நூலக வலைத்தளமானது மீடியாவிக்கியில் இயங்குகிறது. 27.08.2007 அன்று உள்ளிடப்பட்ட இத்தளம் 2007 செப்ரெம்பரில் இருந்து விரிவாக்கப்பட்டுவருகிறது. இப்பொழுது ஏறத்தாழ 8,500 மின்னூல் விபரப்பக்கங்கள் நூலகத் தளத்தில் உள்ளன. இவற்றில் 5,000 க்கும் அதிகமான பக்கங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளிடப்பட்டவையாகும். அவ்வகையில் நூலக வலைத்தளத்தின் பயனாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகிறது.… Continue reading நூலகம்: ஏழு மில்லியன் பக்கப் பார்வைகள்

தகவல் வலையம்

Published on Author Shaseevan

தகவல் வலையம் (Information Network) செயற்றிட்டம் மூலம் எண்ணிம நூலகம், ஆவணக்காப்பகம், மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், ஆய்வுச் செயற்பாடு, கல்வி மேம்பாடு என்ற புள்ளிகள் சார்ந்து இயங்குவதற்கான ஆரம்பக் கட்டமைப்புக்களை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதேசங்கள் சார்ந்து தமிழ் நூலகங்கள், கல்வி நிறுவனங்கள், வெளியீட்டாளர்கள், பிற நிறுவனங்கள் போன்றவற்றிற்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதனூடாக பல்வேறு தளங்களில் அவர்கள் சமூகம் சார்ந்து இயக்கமுறுவதை அதிகப்படுத்தலாம். இதனூடாக மேற்குறிப்பிட்ட தளங்களில் இயங்குவோர் இணைந்ததாகப் பிரதேச ரீதியாக உருவாக்கப்படும் குழுக்களை… Continue reading தகவல் வலையம்

சுதந்திரத்திற்கான சுதந்திர முன்முயற்சி – உங்கள் நூலகம்

Published on Author Noolaham Foundation

ஈழத்தமிழர்களின் நூலகம் வலைத்தளம் பற்றிய சிறு அறிமுகம் – தனபால் சே அச்சு ஊடக வருகை என்பது வரலாற்றில் இணையற்ற மாபெரும் நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் அச்சு ஊடகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுடன் ஐரோப்பியர்களுக்கு வந்துசேர்ந்தது. ஆனால் மற்றவர்களுக்கு (ஏதோ வகையில் இன்றுவரையிலும் தொடரும்) கொடிய காலனிய அடிமைத்தனத்துடன் தான் வந்து சேர்ந்தது. சகிக்கவொண்ணா அடிமைத்தனத்தை எதிர்த்து அளப்பரிய தியாகத்துடன் விடுதலைக்குப் போராடிவரும் மக்களுக்கு வலையூடகம் புதிய வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளது. தெற்காசியாவில் தேசிய விடுதலைக்கான… Continue reading சுதந்திரத்திற்கான சுதந்திர முன்முயற்சி – உங்கள் நூலகம்

எண்ணிம இடைவெளி

Published on Author Gopi

தொடர்பாடல், தகவல் நுட்ப வளர்ச்சியானது இலங்கை போன்ற நாடுகளிலும் அறிவுசார் அபிவிருத்திக்குச் சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. கணினி, இணையம் ஆகியவற்றின் பயன்பாட்டைப் பரவலாக்குவது அனைவருக்கும் சந்தர்ப்பமளிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. ஆயினும் தகவல் நுட்பத்தின் வளர்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் ஒரேயளவில் கிடைப்பதில்லை. எண்ணிம, தகவல் தொழில்நுட்ப வளங்கள் கிடைப்பதிலுள்ள இந்த ஏற்றத்தாழ்வு எண்ணிம இடைவெளி (Digital divide) எனப்படுகிறது. காரணங்கள் சமூகப் பின்னணி, பொருளாதார நிலை, பால், இனம், மொழி, வாழும் பிரதேசம் போன்ற பல்வேறு காரணங்களால் எண்ணிம… Continue reading எண்ணிம இடைவெளி

Annual Report for 2009 Released

Published on Author Noolaham Foundation

The Noolaham Foundation’s Annual Report for 2009 is now available online. This is the second Annual Report published by the Foundation. And this report includes a message from the Board of Trustees, highlights of 2009 and financial details including complete donor details. Being the key accountability document of the Noolaham Foundation, it outlines the strategic decisions… Continue reading Annual Report for 2009 Released