கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ் இலக்கிய மாநாட்டில் சிற்றிதழ்களின் ஆய்வரங்கு – தினக்குரல்

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday May 27 உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றினை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஜூன் முதல் வாரம் 2,3,4ஆம் திகதிகளில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் இரண்டாவது நாள் ஆய்வரங்கில் முதல் நிகழ்வாக சிற்றிதழ்கள் பற்றிய ஆய்வரங்கு இடம் பெற உள்ளது. இந்தச் சிற்றிதழ்கள் அரங்கிற்கு இணைத்தலைவர்களாக பேராசிரியர் சபா ஜெயராசா, செங்கதிர் ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பார்கள். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆய்வரங்களைத் தொடங்கி வைப்பார். மேற்படி ஆய்வரங்கில் ஐந்து காத்திரமான ஆய்வுரைகள்… Continue reading கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ் இலக்கிய மாநாட்டில் சிற்றிதழ்களின் ஆய்வரங்கு – தினக்குரல்

ஒரு சிறு தீப்பொறி – சேரன்

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday April 15 2012 சென்ற வாரம் நூலகம் நிறிவனத்தினரின்  கனடாப் பிரிவினர் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில்  தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அது தொடர்பான சிக்கல்களும் பறற்றிப் பேச வாய்ப்புக் கிடைத்தது. நூலகம் நிறுவனம் எண்ணிம நூலகம் என்பது மட்டுமல்ல ஈழத் தமிழ் ஆவணங்கள், நூல்கள் மேலும் பல்வேறுபட்ட அறிவுச் சான்றுகளையும் பேணவிழைகிற ஒரு சிறப்பான முயற்சியாகும். எண்ணிம நூலகம் பற்றிய நிகழ்வில் யாழ் நூலக எரிப்புப் பற்றிப் பேசுவதும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.… Continue reading ஒரு சிறு தீப்பொறி – சேரன்

எரிக்க முடியாத நூலகம் | அந்தனி ஜீவா

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday 08 April 2012. நமது யாழ். நூலகம் எரிக்கப்பட்ட பின்னர் நம்மவர்கள் எரிக்க முடியாத நூலகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆம் எரிக்க முடியாத நூலகத்திற்கு ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. ஏழு ஆண்டுகள் நிறைவு விழாவின் பொழுது நூலக நிறுவனம் ஒரு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அது மாத்திரமல்ல சிறப்பான ஆண்டு விழாவையும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்தியது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஒரு அறையில் வாடகை செலுத்தி அலுவலகமாக நூலக நிறுவனம் இயங்குகிறது. நூலக நிறுவனத்தின்… Continue reading எரிக்க முடியாத நூலகம் | அந்தனி ஜீவா

தமிழ் விக்கிப்பீடியர் இரவிசங்கர்

Published on Author Noolaham Foundation

நூலகத் திட்டம் ஏழாம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுவதையும் பத்தாயிரம் நூல்களை ஆவணப்படுத்தியுள்ளமையையும் அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு காரணங்கள்: 1. இத்திட்டத்தில் பணியாற்றும் பலருடன் மற்ற திட்டங்களிலும் பங்களித்து வருவதால், ஒரு நண்பனாக நூலகம் குழுவினரின் சாதனையைக் கண்டு மகிழ்கிறேன். 2. சங்கத் தமிழர் காலத்துக்குப் பிறகு, தமிழர்கள் – அதுவும் இளைஞர்கள் – அதுவும் அரசு சாராமல் – அதுவும் இலங்கையின் தற்கால அரசியற் சூழலில் – மொழிக்காக ஒன்றிணைந்து ஏதாவது உருப்பபடியாகச் செய்திருக்கிறார்கள்… Continue reading தமிழ் விக்கிப்பீடியர் இரவிசங்கர்

7ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இயக்குனர் சேரன் ஆற்றிய உரை

Published on Author Noolaham Foundation

மதிப்புக்குரிய தேசிய மொழிகள் மற்றும் இன ஒருமைப்பாடுகள் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்களே, மாநகர சபை உறுப்பினர் திரு S.  குகவரதன் அவர்களே, கொழும்பு தமிழ்சங்க தலைவர் திரு. மு. கதிர்காமநாதன் அவர்களே, எழுத்தாளர்களே, பத்திரிகையாளர்களே, கல்விமான்களே, நலன்விரும்பிகளே, இத்திட்டத்தின் ஆணிவேர்களான தன்னார்வ தொண்டு நண்பர்களே மற்றும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். “ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி” என்ற நூலுடன் தொடங்கிய எமது நூலக திட்டம் இன்று ஏழாண்டுகள் கடந்த நிலையில் ஏராளமான தன்னார்வலர்களின் அளப்பரிய… Continue reading 7ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இயக்குனர் சேரன் ஆற்றிய உரை

எரிக்கமுடியாத நூலகம்

Published on Author Noolaham Foundation

(குமுதம் தீராநதி மார்ச் 2012) ” எனது தந்தையர் நாடு இறந்துவிட்டது அவர்கள் புதைத்தார்கள் அதை நெருப்பில்   நான் வாழ்கிறேன் வார்த்தை என்ற என் தாய் நாட்டில் “ ஜெர்மனியைச் சேர்ந்த ரோஸ் ஆஸ்லேண்டர் ( 1901-1988) என்ற கவிஞர் எழுதிய இந்தக் கவிதை யுத்தத்தால் சிதைக்கப்படும் எந்தவொரு நாட்டுக்கும் பொருந்தக்கூடியது. வீடு தகர்க்கப்படும்போது, சொந்த நிழலும்கூட எரிந்துபோய்விடும்போது,நாடென்று உரிமை பாராட்ட எதுவும் இல்லாமல்ஆகிவிடும்போது ஒரு மனிதனிடம் எஞ்சியிருப்பது சொல் மட்டும் தான். அவன் அதைக்கொண்டு… Continue reading எரிக்கமுடியாத நூலகம்

7 ஆண்டுகளில் 10,000 மின் நூல்கள் நூலக நிறுவனம் சாதனை

Published on Author Noolaham Foundation

(THINAKARAN VAARAMANJARI, SUNDAY MARCH 11 2012) தமிழ் நூல்களை முழுமையாக இணைய உலகிலேயே உலாவிடச் செய்துவரும் நூலகம் நிறுவனத்தின் பணிகள், வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியவை. ஒரு பெரும் பல்கலைக்கழகமோ அல்லது அரச நிறுவனமோ செய்ய வேண்டிய பெரும் பணியைத் தமிழார்வமுடைய நண்பர்களினதும் அனுசரணையாளர்களினதும் துணை கொண்டு நூலக நிறுவனம் மேற்கொண்டுவருதல் தமிழ்கூறும் நல்லுலகின் நன்றிக்கும் பாராட்டுக்குமுரிய அழியாத பணியாக கருதப்படுகிறது என பேராசிரியர் சபா ஜெயராசா கூறினார். இரண்டாயிரத்து ஐந்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலக நிறுவனம் 2011 நவம்பர்… Continue reading 7 ஆண்டுகளில் 10,000 மின் நூல்கள் நூலக நிறுவனம் சாதனை