நூலக நிறுவனத்தின் “மலாய் மொழி – அரபுத்தமிழ் சேகரம்” செயற்றிட்டம்

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் காணப்பட்ட மலாய் ஆவணங்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாரம்பரிய மலாய் குடும்பங்களின் வசம் காணப்படுகின்றன. இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பணியாற்றிய பேராசிரியர் Bacha Husmiya அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இவ் ஆவணங்கள், நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலுக்காக வழங்கப்பட்டு “மலாய் மொழி – அரபுத்தமிழ் சேகரம்” செயற்றிட்டம் ஊடாக எண்ணிமப்படுத்தப்பட்டுள்ளன. 1859 தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வெளியிடப்பட்ட 67 ஆவணங்கள் இப்பகுப்பினுள் தொகுக்கப்பட்டுள்ளன.… Continue reading நூலக நிறுவனத்தின் “மலாய் மொழி – அரபுத்தமிழ் சேகரம்” செயற்றிட்டம்

ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024 இல் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

ஒக்டோபர் 30 தொடக்கம் நவம்பர் 03ஆம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மட்டக்களப்பு, ஏறாவூர் நகர் பிரதேச செயலகம், வாவிக்கரை அருகில் இடம்பெறுகின்ற “ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024” இல் நூலக நிறுவனத்தின் காட்சியறையினையும் பார்வையிடலாம். அச்சு ஆவணங்கள், பல்லூடக ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் என 5,843,832 பக்கங்களைக் கொண்ட 160,077 ஆவணங்களை ஆவணப்படுத்தியுள்ள இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை நீங்களும் தெரிந்துக் கொள்வதற்கான வாய்ப்பு. நூலகம் (www.noolaham.org) என்பதை பிரதான வலைத்தளமாகக் கொண்டு பல்லூடக நூலகம்… Continue reading ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024 இல் “நூலக நிறுவனம்”

160,000 ஆவணங்களைக் கடந்துள்ள நூலக நிறுவனம்

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

நூலக நிறுவனத்தின் ஆவணமாக்கப் பணிகள் மேலும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு 2024 மார்ச் மாதத்தில் 150,000 ஆக இருந்த ஆவண எண்ணிக்கை 10,000 ஆல் அதிகரித்து 160,000 இனைக் கடந்துள்ளது! இப்போது 5.8 மில்லியன் பக்கங்களைக் கொண்ட 160,000+ ஆவணங்களை எண்ணிமப்படுத்தியுள்ள நூலக நிறுவனத்தின் சுவடியாக்கப் பயணத்தில் பங்கேற்க வாருங்கள்!