ஆவணப்படுத்தல் இயக்கம்

Published on Author Noolaham Foundation

அறிமுகம் இன்று தமிழ்மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட ஆவணப்படுத்தல் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஆயிரக்கணகானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் ‘நூலகம்’ செயற்றிட்டம் – நிறுவனம் என்ற கட்டங்களைத் தாண்டி சமூக இயக்கமாகத் தொழிற்படத் தொடங்கியுள்ளது. பல்வேறு துறை சார்ந்தோர் – பல்வேறு அரசியல் சார்ந்தோர் – பல்வேறு சமூகச் செயற்பாடுகள் சார்ந்தோர் என பல்வேறுதரப்பினரையும் உள்வாங்கியுள்ளதோடு ஆவணப்படுத்தல் என்ற புள்ளியில் ஒன்றிணையக்கூடிய சகல தரப்பினரையும் இணைத்துக்கொண்டு இயங்க முயற்சிப்பதை அவதானிக்கலாம். நிறுவனம் என்ற கட்டமைப்பிற்கு வெளியே பிரதேச ரீதியான கட்டமைப்புக்கள், சர்வதேச… Continue reading ஆவணப்படுத்தல் இயக்கம்

இது எரிக்கமுடியாத நூலகம்

Published on Author Noolaham Foundation

(த சண்டே இந்தியன், 06 பெப்ரவரி 2011, பக்கம் 25) சசீவன் கணேசானந்தன். இலங்கைத் தமிழ் பேசும் சமூஉகங்களின் எழுத்தாவணங்களை டிஜிட்டல் முறையில் இணையத்தில் ஆவணப்படுத்தும் ‘நூலகம்’ அறக்கட்டளையின் தலைமை நிர்வாக இயக்குநர். இந்த இணையத்தளத்தில் ஈழத்துத் தமிழ் நூல்களை இலவசமாகப் படிக்கலாம் என்பது சிறப்பம்சம். அவரிடம் பேசினோம். இலங்கைத் தமிழ்ச் சமூகம் என்பது ஏதோவொரு விதத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிற ஒரு சமூகமாக இருக்கிறது. புவியியல் ரீதியாக ஒரே இடத்தில் வாழக்கூடிய சூழலின்றி, அது பரந்த வாழ்கிறது.… Continue reading இது எரிக்கமுடியாத நூலகம்

நூலக நிறுவன நிதியறிக்கை 2010

Published on Author Gopi

எங்கிருந்தும் எந்நேரமும் எல்லோரும் அணுகக் கூடியவை என்பதால் எண்ணிம நூலகங்கள் கல்விச் செயற்பாடுகளுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் மிகுந்த பயன்பாடுடையவை. அத்தகைய எண்ணிம நூலகமொன்றை அக்கறையுள்ள அனைவரும் இணைந்து தன்னளவில் முழுமையானதொன்றாக விரைவாக வளர்த்தெடுப்பது காலத்தின் கட்டாய தேவையாகும். அவ்வகையில் இலங்கைத் தமிழரின் மிகப் பெரும் எண்ணிம நூலகமான www.noolaham.org ஆனது நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. நூலக நிறுவனம் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஓர் இலாபநோக்கமற்ற அமைப்பு ஆகும். நூலக வலைத்தளம் மட்டுமன்றி அதனுடன் தொடர்புடைய பல செயற்றிட்டங்களையும் விழிப்புணர்வூட்டும்… Continue reading நூலக நிறுவன நிதியறிக்கை 2010

இலங்கைத் தமிழர்களினதும் தமிழ் நிலத்தினதும் ஆவணங்களை பேணிப்பயன்படுத்தும் எண்ணிம நூலகத் திட்டம்

Published on Author Noolaham Foundation

By பேராசிரியர் இரா சிவசந்திரன் நூலக நிறுவனம் (www,noolahamfoundation.org) மின்நூல் உருவாக்கத்தினைப் பரவலாக்கும் பணிகளை யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இப் பணியை மேற்கொள்வதற்கான வளவாளர் பயிற்சி வகுப்புகள் 15.02.2011 செவ்வாய் முதல் மூன்று நாட்களுக்கு வண்ணார்பண்ணை இரத்தினம் வீதியில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாணப் பிரதேச இணைப்பாளராகப் பணியாற்றும் பேராசிரியர் இரா சிவசந்திரன் தமிழர் எண்ணிம நூலகத்தின் தேவை, வலைத்தளத்தின் வரலாறும் செயற்பாடும், அதன் பயன்கள், எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் இப் பாரிய… Continue reading இலங்கைத் தமிழர்களினதும் தமிழ் நிலத்தினதும் ஆவணங்களை பேணிப்பயன்படுத்தும் எண்ணிம நூலகத் திட்டம்

2010 இல் 3,109 மின்னூல்கள்

Published on Author Noolaham Foundation

நூலகத் திட்டமானது ஈழத்து எழுத்தாவணங்களை எண்ணிமமாக்கி இணையத்தினூடாகக் கிடைக்கச் செய்யும் செயற்றிட்டமாகும். அது 2010 இல் 3109 அச்சாவணங்களை ஆவணப்படுத்தியுள்ளது. இது 2009 இல் ஆவணப்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் 142 % ஆகும் என்பதோடு ஓராண்டில் ஆவணப்படுத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையுமாகும். 2010 இல் நூலக நிறுவனமானது வாசிகசாலை எனும் செயற்றிட்டத்தினூடாக நேரடியாக மின்னூலாக்கத்தில் ஈடுபட்டது.  இதுதவிர நூலகத் திட்டத்துக்கான நிதியுதவிகளும் எதுவித தடைகளுமில்லாமல் வழங்கப்பட்டன. 2010 இல் நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டத்தினூடாக சரிநிகர், நிகரி, தினமுரசு, திசை,… Continue reading 2010 இல் 3,109 மின்னூல்கள்

நூலகம்: ஏழு மில்லியன் பக்கப் பார்வைகள்

Published on Author Noolaham Foundation

தமிழ் எண்ணிம நூலக (www.noolaham.org) வலைத்தளம் இன்றுடன் (11.01.2011)  ஏழு மில்லியன் தடவைகளுக்குமேல் பார்வையிடப்பட்டுள்ளது. இது சுமார் 3 ஆண்டுகள், நான்கரை மாதங்களுக்கான புள்ளிவிபரம் ஆகும். நூலக வலைத்தளமானது மீடியாவிக்கியில் இயங்குகிறது. 27.08.2007 அன்று உள்ளிடப்பட்ட இத்தளம் 2007 செப்ரெம்பரில் இருந்து விரிவாக்கப்பட்டுவருகிறது. இப்பொழுது ஏறத்தாழ 8,500 மின்னூல் விபரப்பக்கங்கள் நூலகத் தளத்தில் உள்ளன. இவற்றில் 5,000 க்கும் அதிகமான பக்கங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளிடப்பட்டவையாகும். அவ்வகையில் நூலக வலைத்தளத்தின் பயனாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகிறது.… Continue reading நூலகம்: ஏழு மில்லியன் பக்கப் பார்வைகள்

தகவல் வலையம்

Published on Author Shaseevan

தகவல் வலையம் (Information Network) செயற்றிட்டம் மூலம் எண்ணிம நூலகம், ஆவணக்காப்பகம், மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், ஆய்வுச் செயற்பாடு, கல்வி மேம்பாடு என்ற புள்ளிகள் சார்ந்து இயங்குவதற்கான ஆரம்பக் கட்டமைப்புக்களை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதேசங்கள் சார்ந்து தமிழ் நூலகங்கள், கல்வி நிறுவனங்கள், வெளியீட்டாளர்கள், பிற நிறுவனங்கள் போன்றவற்றிற்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதனூடாக பல்வேறு தளங்களில் அவர்கள் சமூகம் சார்ந்து இயக்கமுறுவதை அதிகப்படுத்தலாம். இதனூடாக மேற்குறிப்பிட்ட தளங்களில் இயங்குவோர் இணைந்ததாகப் பிரதேச ரீதியாக உருவாக்கப்படும் குழுக்களை… Continue reading தகவல் வலையம்