2017 வழிகாட்டுநர் சபை பங்கேற்பு அழைப்பு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் முதன்மை முடிவெடுக்கும் சபை வழிகாட்டுநர் சபை (Regulatory Board) ஆகும். இந்தச் சபை ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவு (Annual Plan and Budget) நிறுவனச் செயற்பாடுகள் தொடர்பான முடிவெடுத்தல் (Decision Making) வளந் திரட்டுதல் (Resource Mobilization) வியூகத் திட்டமிடல் (Strategic Planning) செயற்திட்டங்கள்/செயலாக்கங்கள் மேற்பார்வை (Process Oversight) உட்பட்ட பணிகளுக்குப் பொறுப்பானது. இந்தச் சபை சுமார் மாதம் இருமுறை அல்லது ஆண்டுக்கு 20-25 வரையான சந்திப்புக்களை மேற்கொள்ளும். இந்தச் சந்திப்புக்கள் நடைபெறும்… Continue reading 2017 வழிகாட்டுநர் சபை பங்கேற்பு அழைப்பு

நூலக நிறுவனத்தின் புதிய வலைத்தளம்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் புதிய வலைத்தளம் (noolahamfoundation.org/web) அண்மையில் வெளியிடப்பட்டது.  நூலக பங்காளர்கள் சுட்டிக்காட்டிய பல மேம்படுத்தல்களை இந்த புதிய வலைத்தளம் கொண்டுள்ளது. * பன்மொழி வலைத்தளம் – வலைத்தளம் தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்துள்ளது – multilingual website * நடமாடும் கருவிகளுக்கு ஏற்ற வடிவமைப்பு – responsive website * தொழில்சார் வடிவமைப்பு – professional design * உள்ளடக்க ஒழுங்கமைப்பு – improved presentation of the content, improved navigation இந்த வலைத்தளம் டூர்ப்பல்… Continue reading நூலக நிறுவனத்தின் புதிய வலைத்தளம்

நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந்திரட்டல்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவை (Annual Plan and Budget) முன்வைத்தும் அதற்குத் தேவையான வளங்களை வளந் திரட்டுதல் திட்டம் (Resource Mobilization Plan) ஊடாகவும் முன்னெடுக்கின்றது.  இந்தப் பொறிமுறை நூலக நிறுவனமயாக்கச் செயற்பாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.  நாம் இந்தப் பொறிமுறையை  நேர்த்தியுடன் கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல் தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் நூலக நிறுவனத்தின் பங்கேற்பாளரான… Continue reading நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந்திரட்டல்

திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 24 – 30, 2016

Published on Author Noolaham Foundation

இந்த வாரம் (ஒக்ரோபர் 24 – 30, 2016) திறந்த அணுக்க வாரம் (Open Access Week) ஆகும்.  திறந்த அணுக்கம் என்பது அறிவு வளங்களை அனைவருக்கும் கட்டற்று கிடைக்கச் செய்தலுக்கான கொள்கையும் வழிமுறையும் ஆகும்.  திறந்த அணுக்கத்தில் அறிவு வளங்கள் கிடைப்பது கல்வி, ஆய்வு, சமூக வளர்ச்சிக்கு அவசியம் ஆகும். மொழி, கணிதம், அறிவியல், கலைகள் என்று அறிவு என்றும் கட்டற்று இருப்பதன் ஊடாகவே மனித சமூகம் வளர்சி பெறுகின்றது.  ஆனால் இந்த அறிவு வளங்களின்… Continue reading திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 24 – 30, 2016

நூலகத்தில் தினப்புயல் வாரப் பத்திரிகை

Published on Author Noolaham Foundation

“தினப்புயல்” வாரப்பத்திரிகை; வன்னிமண்ணிலிருந்து 2012ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.  இப்பத்திரிகைகளின் ஆரம்ப வெளியீடுகள் முதல் அனைத்து வெளியீடுகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தினூடாக இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி வெளியிடுவதற்கான அனுமதியினை “தினப்புயல்” இயக்குணரும், முன்னணி ஊடகவியலாளரும், இரணியன் எனும் புனைபெயரில் ஊடகங்களில் எழுதிவரும் சக்திவேல் பிள்ளை பிரகாஷ் அவர்கள் நூலக நிறுவன தொடர்பாடல் மற்றும் சமூகத்தொடர்பு அலுவலகரிடம், வவுனியாவில் தேக்கவத்தையில் அமைந்துள்ள “தினப்புயல்”… Continue reading நூலகத்தில் தினப்புயல் வாரப் பத்திரிகை

சாந்திகம் அலுவலகர்களுடன் சந்திப்பு

Published on Author Noolaham Foundation

உளநல ஆலோசனைகள், பயிற்சிகள், உளவள கற்கை நெறிகள் தொடர்பில் பல உளவள வைத்திய நிபூணர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் இருந்து நீண்டகாலமாக சேவையாற்றிவரும் சாந்திகம் நிலையத்தில் (Shanthiham-Association for health and Counselling) அந் நிறுவன இயக்குணர் ஜே.தற்பனன் மற்றும் நிறுவன அலுவலர்கள், மூத்த உளவள வைத்திய நிபூணர் வைத்திய கலாநிதி.தயா சோமசுந்தரம் முதலியோருடன் 05/12/2015 அன்று நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகர் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பில் ஓர் சிறு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதன்… Continue reading சாந்திகம் அலுவலகர்களுடன் சந்திப்பு

நூலகத்தில் மொழிதல் ஆய்விதழ்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பில் இருந்து ஓர் ஆய்விதழாக வெளிவரும் ‘மொழிதல்’ இதழ்களினை இப்போது நூலகம் நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிடமுடியும். இவ் ஆய்விதழ் அரையாண்டிதழாக 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான சி.சந்திரசேகரம், வ.இன்பமோகன், சு.சிவரத்தினம் முதலியோர் இவ் இதழ்களினது ஆசிரியர்களாக உள்ளனர். மேலும் பல முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் இவ் இதழின் ஆலோசகர்வட்டத்தில் பங்கெடுக்கின்றனர். பல்வேறு புலமையாளர்களின் கட்டுரைகளை உள்ளடக்கங்களாகக் கொண்டு இவ் ஆய்விதழ் வெளியாகின்றது. இதனை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்… Continue reading நூலகத்தில் மொழிதல் ஆய்விதழ்