நூலகத்தில் கெளரீஸ்வரனின் வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பின் இளம் சமூக செயற்பாட்டாளரும், சமூக அரங்கான கூத்தரங்கின் ஆய்வாளரும், மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழுவின் மூத்த உறுப்பினரும், எழுத்தாளருமான ஆசிரியர் திரு. துரை. கெளரீஸ்வரன் அவர்களுடைய எழுத்துக்களை தற்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் அணுகி வாசிக்கலாம். இதற்கான அனுமதியினை ஆசிரியர் திரு.துரை.கெளரீஸ்வரன் அவர்கள் நூலக நிறுவனத்திடம் கையளித்தார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/och87xy {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது உறவினர்களுடைய நினைவுமலர்களையும்… Continue reading நூலகத்தில் கெளரீஸ்வரனின் வெளியீடுகள்

நூலகத்தில் மட்டக்களப்பு இசைநாடகப் பள்ளியின் வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

இசைநாடகப்பள்ளி; மட்டக்களப்பின் குருக்கள் மடத்தில் இருந்து கீதா கெளரிபாலன் என்பவரால் கடந்த இருஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு இசை மற்றும் நாடகம் முதலியவற்றினை தொடர்ச்சியாக பேணும் நோக்குடனும் புதியதோர் தலைமுறையினை இதன்பால் வளர்த்தெடுக்கும் நோக்குடனும் தொடர்ந்து இயங்கிவருகின்றது. இவ் இசைநாடகப் பள்ளியின் வெளியீடாக ‘வியளம்’ எனும் சஞ்சிகை சிறுவர்கள், இளையோர்கள் போன்றோரின் ஆற்றலுக்கு களமமைக்கும் விதமாக அண்மைக்காலமாக வெளியிடப்படுகின்றது. இச் சஞ்சிகைகள் நூலக நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்படுகின்றன. இவற்றின் பிரதிகள் மற்றும் அனுமதிகள் போன்றவற்றினை ‘இசைநாடகப் பள்ளியின்’ நிறுவனரும்,… Continue reading நூலகத்தில் மட்டக்களப்பு இசைநாடகப் பள்ளியின் வெளியீடுகள்

நூலகத்தில் வலம்புரி நாளிதழ்

Published on Author Noolaham Foundation

பதினைந்து ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள வலம்புரிப் பத்திரிகையானது 1999ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இற்றை வரை சிறப்பான செய்திப்பதிவுகளை மேற்கொண்டுவரும் ஓர் தினசரி செய்திப் பத்திரிகை ஆகும். மேலும் இலங்கையின் வடபகுதி ஊடகங்களில் பதினைந்து ஆண்டுகால சிறப்பான செய்திப்பதிவுகள் அடங்கிய வரலாற்றுப் பின்புலத்தினை கொண்ட இப்பத்திரிகையானது தனது ஆரம்பகால வெளியீடுகள் உட்பட அனைத்து வெளியீடுகளையும் இலங்கை தமிழ் பேசும் சமூகத்தின் எண்ணிம ஆவணக்காப்பகமான நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்தி உலகலாவிய ரீதியில் திறந்த அணுக்கத்தில் பகிரவுள்ளது. நூலக… Continue reading நூலகத்தில் வலம்புரி நாளிதழ்

நூலகத்தில் நினைவு மலர்கள்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனம் கடந்த பதினொரு ஆண்டுகளில் இலங்கைத் தமிழ்பேசும் சமூகம் தொடர்பான எண்ணிம ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாக 300க்கும் மேற்பட்ட நினைவு மலர்களை (கல்வெட்டுக்கள்) ஆவணப்படுத்தி http://tinyurl.com/nt5bqcf மூலம் பகிர்ந்துள்ளது. பொதுவாக நூலகங்களிலோ ஆவணகங்களிலோ நினைவு மலர்கள், அந்தியட்டி, திவச கல்வெட்டுக்கள் ஆவணப்படுத்துதல் அரிதாக உள்ளது. எமது சமூக, சமய, பண்பாட்டு, பிரதேச வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கும் இந்த வெளியீடுகளின் முக்கியத்துவம் போதிய அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை. இச் சூழலில் நூலக நிறுவனம் இவற்றின் முக்கியத்துவம் கருதிப்… Continue reading நூலகத்தில் நினைவு மலர்கள்

நூலகத்தில் திருமறைக் கலாமன்ற வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் அரங்கவியல் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்துள்ள “திருமறைக்கலாமன்றத்தின்” வெளியீடுகளை இப்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிட முடியும். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/nrdegj9 கலைமுகம் இதழ்கள்: http://tinyurl.com/Kalaimugam {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}

புதிய தன்னார்வலர்கள் நூலகத்துடன் இணைவு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தினால் கடந்த பதினொரு வருடங்களாக உலகளாவியரீதியில் மேற்கொள்ளப்படும் இலங்கைத் தமிழ்பேசும் சமூகம் சார்ந்த ஆவணங்களை எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் செயற்பாடுகளுக்கு உலகம் பூராகவும் இருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் தொடர்ச்சியாக பலவழிகளில் பங்களிப்பு செய்துவருகின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களில் நூலக நிறுவனத்தினோடு பல புதிய தன்னார்வலர்களும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் இணைந்து கொண்டு, இலங்கை தமிழ்பேசும் சமூகம் தொடர்பான எண்ணிம ஆவணப்படுத்தலுக்கு பிரஞ்ஞை பூர்வமான தமது பங்களிப்பினை பலவழிகளிலும் செய்து வருகின்றனர். மேலதிக தன்னார்வலர்களின்… Continue reading புதிய தன்னார்வலர்கள் நூலகத்துடன் இணைவு

நூலகத்தில் ஜீவநதி மாத இதழ்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழான ‘ஜீவநதி’ இதழ்கள் நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு பகிரப்படுகின்றன. ஜீவநதி இதழின் ஆசிரியர் திரு. க. பரணிதரன் அவர்கள் இதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்துக்கு அளித்துள்ளதுடன் ஜீவநதி இதழ்களையும் நூலக நிறுவனத்துக்கு அளித்துவருகின்றார். மேலும் ஜீவநதி வெளியீடுகள் அனைத்தையும் நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும் நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். இணைப்பில் நூல்கள்: http://tinyurl.com/p2ze6pv {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில்… Continue reading நூலகத்தில் ஜீவநதி மாத இதழ்