நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடல் 2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடலானது 20.12.2023 அன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நூலக அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் அலுவலகப் பணியாளர்கள் நேரடியாக கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்கள் Zoom ஊடாக இணையவழியில் இணைந்து கொண்டனர்.     இவ் ஒன்றுகூடலில் 5S சார்ந்த ஒழுங்கமைப்பு, 2024 ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல், நூலகத்திற்கான புதிய நலன்புரி அமைப்புக்கான உறுப்பினர் தெரிவு என்பன இடம்பெற்றன. அதன் பின்னர் நாட்டின் காலநிலை சீரின்மை… Continue reading நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடல் 2023

நூலகத்தில் “செங்கதிர்” சஞ்சிகை

Published on Author Loashini Thiruchendooran

‘செங்கதிர்’ கிழக்கிலங்கையில் இருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய பண்பாட்டுப் பல்சுவை மாத இதழ் ஆகும். 2008ஆம் ஆண்டு தை மாதம் இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டதுடன் 2013 ஆம் ஆண்டு வரையில் 61 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. திறந்த பொருளாதாரமும் உலகமயமாதலும் பண்பாட்டுத் தனித்துவங்களை பாதித்து வருகின்ற சூழலில் மனித மனங்களை செழுமைப்படுத்தும் வல்லமை இலக்கியங்களுக்கு உண்டு என்பதை எடுத்தியம்பும் வகையில் மரபுகளில் காலூன்றி நின்று புதுமையை நோக்குவதாக அமைந்துள்ள இச் சிற்றிதழ்கள் நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,… Continue reading நூலகத்தில் “செங்கதிர்” சஞ்சிகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 26.05.2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான சசீவன் கணேசானந்தன் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் மனித உரிமைகள் ஆர்வலரான அம்பிகா சத்குணநாதன் ஆகியோர் கடந்த 26.05.2023 அன்று நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்கள். இவர்கள் இருவரும் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் குறிப்பாக அம்பிகா சத்குணநாதன் அவர்கள் நூலக நிறுவனத்தின் சட்ட ரீதியான பிரச்சினைகள், தூதரகங்களுடன் எவ்வாறு ஒருங்கிணந்து செயற்படலாம், ஏனைய… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 26.05.2023

வன்னி புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023

Published on Author Loashini Thiruchendooran

தமிழ்மாமன்றத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூன் 24,25 ஆம் திகதிகளில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடாத்தப்பட்ட வன்னியின் புத்தகப் பண்பாட்டு திருவிழாவில் நூலக நிறுவனமும் கலந்து கொண்டது. இந்நிகழ்வில் நூலக நிறுவனம் சார்பில் சிறகுகள் அமைய வன்னி பிராந்திய செயற்பாட்டாளர்கள்  கலந்து கொண்டதுடன்  பார்வையாளர்கள் மத்தியில் நூலக நிறுவனம் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பு, நூலகத்தின் ஈ-பள்ளிக்கூடம் செயற்றிட்டம் தொடர்பான விளக்கமளிப்பு மற்றும் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்பு என்பன இடம்பெற்றன. குறிப்பாக… Continue reading வன்னி புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023

நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வும் 19ஆவது ஆண்டு ஆரம்ப சந்திப்பும்

Published on Author Loashini Thiruchendooran

பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி 15, 2005 அன்று ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டு 130,545 ஆவணங்களுடனும் 4,631,372 பக்கங்களுடனும் தனது 19ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கிற நூலக நிறுவனம், பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான ‘தைப் பொங்கல்’ மற்றும் நூலக நிறுவனத்தின் 19ஆவது ஆண்டு ஆரம்ப விழா என்பவற்றை சுண்டுகுளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக அலுவலகத்தில் 15 ஜனவரி 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று உற்சாகத்துடன் கொண்டாடியது. நூலக நிறுவனப் பணியாளர்கள் மற்றும் நூலகத் தன்னார்வலர்கள் ஆகியோர் இப்பொங்கல்… Continue reading நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வும் 19ஆவது ஆண்டு ஆரம்ப சந்திப்பும்

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் – 2022

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடலானது 25.11.2022 – 26.11.2022 வரையிலான காலப்பகுதியில் இரண்டு நாட்கள் பயணமாகத் திருகோணமலையில் இடம்பெற்றது. இப்பயணத்தில் நூலக நிறுவனப் பணியாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களிடையே வேடிக்கையான விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன. இப்பயணத்தின் முதல் நாள், # திருகோணமலை ஸ்ரீ லக்‌ஷ்மி நாராயனப் பெருமாள் கோவில் # ஸ்ரீ திருக்கோணேஸ்வரம் கோவில் # சீனக்குடா துறைமுகம் # நிலாவெளி கடற்கரை போன்ற இடங்களும் இரண்டாம் நாள், # திருகோணமலை மாபல் கடற்கரை # கண்ணியா வெந்நீரூற்று என்பனவும் பார்வையிடப்பட்டன.  … Continue reading நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் – 2022

நூலக நிறுவன வேலைவாய்ப்பு – கள ஆய்வாளர் – கிளிநொச்சி பிராந்திய ஆவணப்படுத்தல் / Field Researcher – Kilinochchi Regional Documentation

Published on Author Noolaham Foundation

Job Title  Field Researcher – Kilinochchi Regional Documentation Reports to  Program Manager Profile of Institution Noolaham Foundation, Sri Lanka Base Location  Kilinochchi, Sri Lanka  Type Full Time / Salaried (Based on Job Grid of NF) Period of Assignment One year (Probationary period of three months, and possibility of extension based on performance and organisational needs)… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்பு – கள ஆய்வாளர் – கிளிநொச்சி பிராந்திய ஆவணப்படுத்தல் / Field Researcher – Kilinochchi Regional Documentation