விக்கிப்பீடியா – நூலகம் இணைந்து ஹட்டனில் பயிற்சிப் பட்டறை

Published on Author Vijayakanthan

விக்கிப்பீடியா, நூலகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 28.08.2017 திங்கட்கிழமையன்று மலையகத்தில் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தினர். இப்பயிற்சிப்பட்டறை ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் இணைந்து முன்னெடுக்கும் ”இலங்கையின் கிழக்கு – வடக்கு – மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்” எனும் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே மேற்படி பயிற்சி பட்டறை மலையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், ஆவணப்படுத்துனர்கள், கணிணித்துறை நிபுணர்கள் மற்றும்… Continue reading விக்கிப்பீடியா – நூலகம் இணைந்து ஹட்டனில் பயிற்சிப் பட்டறை

த. சீனிவாசனுக்கு தமிழ் இலக்கியத் தோட்ட தமிழ்க் கணிமை விருது

Published on Author Noolaham Foundation

தமிழ்ச் சூழலில் கட்டற்ற இயக்கத்தை (Free Software and Free Culture Movement) கொள்கையிலும் செயலிலும் முன்நகர்த்திச் செல்வதில் முதன்மையான ஒரு பங்களிப்பாளரான த. சீனிவாசனுக்கு 2016 இக்கான தமிழ் இலக்கியத் தோட்டத்தின் “தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது” கிடைத்துள்ளது.  இது அவரது பரந்த பங்களிப்புக்கான ஒரு சிறு அங்கீகரிப்பே.  அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.  தமிழ்க் கணிமைக்கு அவரது விரிவான பங்களிப்பை பற்றி இங்கும், இங்கும் மேலும் அறியலாம். களத்தில் உள்ள தமிழ்க் கணிமை… Continue reading த. சீனிவாசனுக்கு தமிழ் இலக்கியத் தோட்ட தமிழ்க் கணிமை விருது

நூலகம் – உத்தமம் இணைந்து நடாத்தும் கருத்தரங்கு

Published on Author Noolaham Foundation

நூலகம் – உத்தமம் இணைந்து நடாத்தும் கருத்தரங்கு   இணையத்தில் தமிழ் மொழி பயன்பாடு பல்லூடக ஆவணப்படுத்தலில் நூலக நிறுவனம் விக்கிபீடியா அறிமுகம் நேரம் : பி.ப. 02:30 – 06:00 மணி காலம் : 08.04.2017 சனிக்கிழமை இடம் : நூலக நிறுவனம் . இல 100 , ஆடியபாதம் வீதி,கொக்குவில் , யாழ்ப்பாணம் கலந்து கொள்ளவிரும்பின் உங்கள் முன்பதிவுகளை மின்னஞ்சல் மூலமாகவோ குறுந்தகவல் மூலமாகவோ விரைவில் அறியத்தரவும் உத்தமம் infittsl@gmail.com +0094 766 427… Continue reading நூலகம் – உத்தமம் இணைந்து நடாத்தும் கருத்தரங்கு

நூலக நிறுவன வழிகாட்டுநர் சபையின் புதிய உறுப்பினர்கள்

Published on Author Noolaham Foundation

ஈழத் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்தலில் விரிவான ஈடுபாடும், அனுபவமும், ஆற்றலும் உள்ள மூன்று புதியவர்கள் நூலக நிறுவனத்தின் வழிகாட்டுநர் சபையில் தெரிவுசெய்யப்பட்டு இணைந்துள்ளார்கள்.  அவர்களை நாம் அன்புடன் வரவேற்கிறோம். இ. மயூரநாதன் இ. மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவின் (ta.wikipedia.org) முன்னோடிப் பங்களிப்பாளர் ஆவார். இலங்கையில் வண்ணார்பண்ணையில் பிறந்து, கட்டிடக்கலையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் நெடுங்காலம் பணிபுரிந்தவர். தற்போது ஓய்வு பெற்று யாழில் மீள் குடியேறியுள்ளார். 2003 ஆம் ஆன்று தமிழ் விக்கிப்பீடியாவைத்… Continue reading நூலக நிறுவன வழிகாட்டுநர் சபையின் புதிய உறுப்பினர்கள்

நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத் தளம் (aavanaham.org) இன்று பொதுவில் வெளியிடப்படும் செய்தியைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.  நீண்ட காலம் எமது இலக்குகளில் ஒன்றாக இருந்த இந்தச் செயற்திட்டம் வெளிவருவது நூலக நிறுவன ஆவணப்படுத்தற் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றும். நூலக பல்லூடாக ஆவணகம் (Multimedia Archiving Platform) நூலக நிறுவனத்தின் பின்வரும் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றது. * ஒலிக் கோப்புக்கள் (audio), நிகழ்படங்கள் (video), ஒளிப்படங்கள் (photos), எண்ணிம ஆவணங்கள் (born… Continue reading நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

2017 வழிகாட்டுநர் சபை பங்கேற்பு அழைப்பு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் முதன்மை முடிவெடுக்கும் சபை வழிகாட்டுநர் சபை (Regulatory Board) ஆகும். இந்தச் சபை ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவு (Annual Plan and Budget) நிறுவனச் செயற்பாடுகள் தொடர்பான முடிவெடுத்தல் (Decision Making) வளந் திரட்டுதல் (Resource Mobilization) வியூகத் திட்டமிடல் (Strategic Planning) செயற்திட்டங்கள்/செயலாக்கங்கள் மேற்பார்வை (Process Oversight) உட்பட்ட பணிகளுக்குப் பொறுப்பானது. இந்தச் சபை சுமார் மாதம் இருமுறை அல்லது ஆண்டுக்கு 20-25 வரையான சந்திப்புக்களை மேற்கொள்ளும். இந்தச் சந்திப்புக்கள் நடைபெறும்… Continue reading 2017 வழிகாட்டுநர் சபை பங்கேற்பு அழைப்பு

நூலக நிறுவனத்தின் புதிய வலைத்தளம்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் புதிய வலைத்தளம் (noolahamfoundation.org/web) அண்மையில் வெளியிடப்பட்டது.  நூலக பங்காளர்கள் சுட்டிக்காட்டிய பல மேம்படுத்தல்களை இந்த புதிய வலைத்தளம் கொண்டுள்ளது. * பன்மொழி வலைத்தளம் – வலைத்தளம் தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்துள்ளது – multilingual website * நடமாடும் கருவிகளுக்கு ஏற்ற வடிவமைப்பு – responsive website * தொழில்சார் வடிவமைப்பு – professional design * உள்ளடக்க ஒழுங்கமைப்பு – improved presentation of the content, improved navigation இந்த வலைத்தளம் டூர்ப்பல்… Continue reading நூலக நிறுவனத்தின் புதிய வலைத்தளம்