தாய்வீடு அரங்கியல் விழா 2018

Published on Author தண்பொழிலன்

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தாய்வீடு இதழானது, கடந்த சில ஆண்டுகளாக, ‘அரங்கியல் விழா’ என்ற கலையாற்றுகையை நிகழ்த்தி வருகின்றது. ‘நமது கலைகளை நாமே போற்றுவோம்’ என்பதற்கமைய உருவாக்கப்பட்ட கலைக்களம் இது. ஈழத்தமிழரின் தனித்துவமான கலையாடலான நாட்டுக்கூத்துக்கு தாய்வீடு அதிக முன்னுரிமை அளித்து வந்திருக்கிறது. அந்த விதத்தில்,  இதுவரை மூன்று கூத்துக்களை அரங்கேற்றியுள்ள தாய்வீடு, இவ்வாண்டும் ஒரு கூத்தை அரங்கேற்ற உள்ளது. இது தவிர, நாட்டியம், நாடகம் முதலான பல கலையாடல்களும் மேடையேற உள்ளன. இவ்வாண்டும் இந்நிகழ்வில் நூலகம்… Continue reading தாய்வீடு அரங்கியல் விழா 2018

நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து, இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் தொழிற்கலைகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. அருகிவரும் தொழிற்கலைகளை பல்லூடகங்களைப் பயன்படுத்தி ஆவணப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். புகைப்படங்கள், காணொளிகள், வாய்மொழி வரலாறுகள் என்பன பெறப்பட்டு, அவை நூலகத்தின் ஆவணகம் வலைத்தளத்தில் தனிச்சேகரங்கள் திறக்கப்பட்டு அங்கு சேகரிக்கப்படுகின்றன.   இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட தொழிற்கலைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தும்புக்கைத்தொழிலானது, கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி கிராமத்தை மையமாகக் கொண்டு ஆவணப்படுத்தப்பட்டது. தென்னம்மட்டையை பெற்றுக்கொள்ளல்,… Continue reading நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்

இலங்கையின் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தைக் காக்கும் எண்ணிம நூலகம் – ரோர்

Published on Author தண்பொழிலன்

“இனமுறுகல் வெடித்த 1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம், நாட்டின் அறிவுசார் வளங்கள் இல்லாமல் போன மிக மோசமான இழப்பாக இன்றும் நினைவுகூரப்படுகின்றது. இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் அனுபவித்த கொடூரங்களில் ஒன்றாக இந்நிகழ்வு சித்தரிக்கப்படுகிறது. உண்மை என்னவென்றால், 97,000 புத்தகங்களோடு எரிந்தழிந்து போன யாழ் நூலகம், இலங்கையின் ஆவணப்படுத்தல் பாரம்பரியத்தின் மிகப்பெரிய அங்கமொன்றை இலங்கை இழந்த மாபெரும் இழப்பு அது. அப்படியொரு அனர்த்தம் மீள நிகழக்கூடாது என்பதே 2005 இல் எண்ணிம நூலகம் உருவானதன் முக்கியமான… Continue reading இலங்கையின் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தைக் காக்கும் எண்ணிம நூலகம் – ரோர்

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து கடந்த சனிக்கிழமையன்று (16 ஜூன் 2018) நடத்திய பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறையானது மிகவும் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்திருந்தது. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்களால், பயிற்சிக்கு வந்திருந்த ஆர்வலர்களுக்கு, பல்வேறு நிலைகளில் (நல்ல நிலையில் உள்ளவை, கறையான் அரித்தவை, தெளிவானவை, தெளிவற்றவை) கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள் பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டன. ஓலைச்சுவடிகளைத் தூய்மைப்படுத்தும் வழிவகைகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் பற்றிய விளக்கங்களின் பின்னர் ஓலைச்சுவடிகளை வாசிக்கும் வழிமுறைகளும்… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

Published on Author தண்பொழிலன்

‘அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்றினை ஒழுங்கு செய்திருக்கின்றன. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள்  (முந்நாள் உயிரியல் துறைத் தலைவர், விவசாயபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இடம்: அண்ணாமலை கனடா (101-1240 Ellesmere Rd, Scarborough, ON M1P 2X4) காலம்: சனிக்கிழமை (16 ஜூன் 2018) பி.ப. 1.00 முதல் பி.ப. 3.00 வரை பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

Published on Author தண்பொழிலன்

முகநூலில் அண்மையில் பிரபலமாக இருந்த ஐந்து புத்தகங்கள் சவால் (Five books challenge) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக இந்த சவாலில் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பதிவிட்டு, இன்னும் ஐந்து பேரை இணைத்துக்கொள்வார்கள். அவ்வாறு இணைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். பிரபலமான அல்லது பலருக்கும் பிடித்தமான புத்தகங்களின் அட்டைகளே இந்த சவாலில் பெரும்பாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. எனினும், முகநூல் பதிவர்கள், பத்தோடு பதினொன்றாகக் கருதி அந்தப் பதிவுக்கு விருப்பம்… Continue reading ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

Toronto – Jaffna Partnership – Library Initiative Launch

Toronto mayor John Tory and Northern province chief minister Justice C. V. Vigneswaran signed a Memorandum of Understanding last year. Economic development, education, governance and library services were selected as key areas for cooperation. The focus of library services as one of the four core areas demonstrate the critical role libraries can play in reconstruction… Continue reading Toronto – Jaffna Partnership – Library Initiative Launch