பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

Published on Author Noolaham Foundation

அழிவை எதிர்நோக்குகின்ற, எதிர்காலத்தில் பல்வேறுபட்ட ஆய்வுகளுக்கு துணைநிற்க கூடிய ஆவணங்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எண்ணிம வடிவில் ஆவணப்படுத்துவதற்காக பிரித்தானிய நூலகத்தினால் (British Library) தொடங்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தான் Endangered Archive Program (EAP). இதனடிப்படையிலான செயற்றிட்டங்கள் பல்வேறு நாடுகளில் EAP தொடரிலக்கத்துடன் பிரித்தானிய நூலக அனுசரணையில் நடைபெற்று வருகின்றது. இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள French Institute of Pondicheri இலிந்து மேற்கொள்ளப்படும் EAP 458 குழுவினர் நூலக நிறுவனத்திற்கு எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல்… Continue reading பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

இணையத்தில் ஓர் ஈழத் தமிழ் நூலகம்

Published on Author Noolaham Foundation

Virakeasari Sunday Jun 24 இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் சிறிது காலம் இலங்கை ஒலிப்பரப்புக்கூட்டுத்தாபனத்தில் ‘கலைக்கோலம்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக வாரத்தில் ஒரு தடவை செல்வதுண்டு. அக்காலத்தில் அரசஊடகங்களில் குறிப்பாக இலங்கை வானொலியில் ‘ஈழம்’ என்ற சொல்லை பாவிக்க முடியாதிருந்தது.ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்று தொடங்கும் வசனங்களையெல்லாம் இலங்கை இலக்கிய வளர்ச்சி என்றே திருத்தி வாசிக்க வேண்டும். அத்துடன் சாதி என்ற சொல்லும் வந்துவிடக்கூடாது. எழுத்தாளர் கே.டானியல் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் மறைந்ததையடுத்து கலைக்கோலம் நிகழ்ச்சியில் அவர் பற்றிய ஒரு அஞ்சலிக்கட்டுரையை… Continue reading இணையத்தில் ஓர் ஈழத் தமிழ் நூலகம்

உயில் கலை இலக்கிய சங்கத்தின் புனைவும் புதிதும் நூல் வெளியீடு – தினமுரசு

Published on Author Noolaham Foundation

THINAMURASU Monday May 21   உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சு.குணேஸ்வரனின் புனைவும் புதிதும் நூல் வெளியீடும் மற்றும் புதிய நூலக செய்திமடல் அறிமுக நிகழ்வும் நேற்றும் முன் தினம் பி.ப. 3.00 மணியளவில் கொற்றாவத்தை பூமகள்சன சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாத்திரிகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல் ஆய்வுரையை மூத்த எழுத்தாளர் தெணியான், மதிப்பீட்டுரையை யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை விரிவுரையாளர் ராஜேஸ்கண்ணன் ஆகியோர் வழங்கினர். புதிய நூலக செய்திமடல் அஜந்தகுமார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒரு சிறு தீப்பொறி – சேரன்

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday April 15 2012 சென்ற வாரம் நூலகம் நிறிவனத்தினரின்  கனடாப் பிரிவினர் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில்  தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அது தொடர்பான சிக்கல்களும் பறற்றிப் பேச வாய்ப்புக் கிடைத்தது. நூலகம் நிறுவனம் எண்ணிம நூலகம் என்பது மட்டுமல்ல ஈழத் தமிழ் ஆவணங்கள், நூல்கள் மேலும் பல்வேறுபட்ட அறிவுச் சான்றுகளையும் பேணவிழைகிற ஒரு சிறப்பான முயற்சியாகும். எண்ணிம நூலகம் பற்றிய நிகழ்வில் யாழ் நூலக எரிப்புப் பற்றிப் பேசுவதும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.… Continue reading ஒரு சிறு தீப்பொறி – சேரன்

எரிக்க முடியாத நூலகம் | அந்தனி ஜீவா

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday 08 April 2012. நமது யாழ். நூலகம் எரிக்கப்பட்ட பின்னர் நம்மவர்கள் எரிக்க முடியாத நூலகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆம் எரிக்க முடியாத நூலகத்திற்கு ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. ஏழு ஆண்டுகள் நிறைவு விழாவின் பொழுது நூலக நிறுவனம் ஒரு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அது மாத்திரமல்ல சிறப்பான ஆண்டு விழாவையும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்தியது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஒரு அறையில் வாடகை செலுத்தி அலுவலகமாக நூலக நிறுவனம் இயங்குகிறது. நூலக நிறுவனத்தின்… Continue reading எரிக்க முடியாத நூலகம் | அந்தனி ஜீவா

தமிழ் விக்கிப்பீடியர் இரவிசங்கர்

Published on Author Noolaham Foundation

நூலகத் திட்டம் ஏழாம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுவதையும் பத்தாயிரம் நூல்களை ஆவணப்படுத்தியுள்ளமையையும் அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு காரணங்கள்: 1. இத்திட்டத்தில் பணியாற்றும் பலருடன் மற்ற திட்டங்களிலும் பங்களித்து வருவதால், ஒரு நண்பனாக நூலகம் குழுவினரின் சாதனையைக் கண்டு மகிழ்கிறேன். 2. சங்கத் தமிழர் காலத்துக்குப் பிறகு, தமிழர்கள் – அதுவும் இளைஞர்கள் – அதுவும் அரசு சாராமல் – அதுவும் இலங்கையின் தற்கால அரசியற் சூழலில் – மொழிக்காக ஒன்றிணைந்து ஏதாவது உருப்பபடியாகச் செய்திருக்கிறார்கள்… Continue reading தமிழ் விக்கிப்பீடியர் இரவிசங்கர்

7ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இயக்குனர் சேரன் ஆற்றிய உரை

Published on Author Noolaham Foundation

மதிப்புக்குரிய தேசிய மொழிகள் மற்றும் இன ஒருமைப்பாடுகள் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்களே, மாநகர சபை உறுப்பினர் திரு S.  குகவரதன் அவர்களே, கொழும்பு தமிழ்சங்க தலைவர் திரு. மு. கதிர்காமநாதன் அவர்களே, எழுத்தாளர்களே, பத்திரிகையாளர்களே, கல்விமான்களே, நலன்விரும்பிகளே, இத்திட்டத்தின் ஆணிவேர்களான தன்னார்வ தொண்டு நண்பர்களே மற்றும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். “ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி” என்ற நூலுடன் தொடங்கிய எமது நூலக திட்டம் இன்று ஏழாண்டுகள் கடந்த நிலையில் ஏராளமான தன்னார்வலர்களின் அளப்பரிய… Continue reading 7ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இயக்குனர் சேரன் ஆற்றிய உரை