பேரா. கா. குகபாலன் தனது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கினார்

Published on Author Noolaham Foundation

புவியியல்த் துறை ஓய்வுநிலைப் பேரா.குகபாலன் கார்த்திகேசு 22/07/2015 அன்று நூலக நிறுவன யாழ் அலுவலகத்துக்கு வருகை தந்து, இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தல் மேற்கொள்வதன் அவசியம் குறித்து நூலக அலுவலகர்களுடன் ஓர் சிறப்பான கலந்துரையாடலில் ஈடுபட்டு இருந்தார். பேரா.குகபாலன் புவியியல், வரலாறு, அரசியல் நிலைப்பட்ட பல முக்கிய புத்தகங்களினை எழுதியுள்ளார். அவற்றில் இதுவரை நூலக நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றன, நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பத்வேற்றப்பட்டு அனைவருக்கும் இலவசமாகவும் இன்று பகிரப்பட்டுள்ளன. இவ்வாறு பகிர்வதற்கான அனுமதியையும்… Continue reading பேரா. கா. குகபாலன் தனது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கினார்

“சூரியா” பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகள் யாவற்றையும் ஆவணப்படுத்தி வெளியிடுவதற்கான அனுமதி ‘சூரியா’ நிலையத்தினால் 30-06-2015 அன்று லேடி மன்னிங் றைவ், மட்டக்களப்பில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் வைத்து நூலக நிறுவனத்தின் தொடர்பாடல் அலுவலகரிடம் கையளிக்கப்பட்டது. கிழக்கிலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக பெண்கள் தொடர்பான முன்னேற்றம், அபிவிருத்தியில் பல பெண்கள் மற்றும் புத்தியீவிகளின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் ‘சூரியா’ நிலையம் பல்வேறு பெண்ணியம் சார்ந்த வெளியீடுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் பெண்ணியம் சார்ந்து… Continue reading “சூரியா” பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்

தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் அருண்மொழிவர்மன் ஆற்றிய உரை

Published on Author Noolaham Foundation

சமூகத்தினை நோக்கிய தசாப்தம் கடந்த பயணத்தின் தொடர்ச்சியில் “இலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஓர் எண்ணிம ஆவணக்காப்பகம்- “நூலக நிறுவனம்” கனடாவில் 09/05/2015 அன்று இடம்பெற்ற தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களின் ஆவண இறுவெட்டு வெளியீட்டு வைபவத்தில் நூலகத்தின் தனார்வலர்களின் ஒருவரான சுதர்சன் ஶ்ரீனிவாசன் (அருண்மொழிவர்மன்) அவர்கள், “நூலகத்துடன் உலகம் பூராகவும் பரந்து வாழும் தமிழ் பேசும் சமூகங்கள் இணைந்து பங்களிக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். நூலகத்துடன் அனைவரும் # அரிய பலஆவணங்களினைப் பகிந்தும், #… Continue reading தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் அருண்மொழிவர்மன் ஆற்றிய உரை

தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இளையதம்பி தயானந்தா ஆற்றிய உரை

Published on Author Noolaham Foundation

லண்டனில் 26/04/2015 அன்று இடம்பெற்ற, “தவில் மேதை தட்சணாமூர்த்தி” அவர்களைப்பற்றிய ஆவண இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் நூலக நிறுவனம் பற்றியதும், நூலக நிறுவனத்தின் சாதனைகள் பற்றியதுமான சிறப்பான உரை ஒன்று இளையதம்பி தயானந்தா அவர்களினால் ஆற்றப்பட்டது. அவர் தனது உரையில் நூலகம் நிறுவனம், இலங்கைத் தமிழ் பேசும் சமூகம் சார் 15,000க்கும் மேற்பட்ட எழுத்தாவணங்களை கடந்த 11 வருடங்களில் ஆவணப்படுத்தி உலகம் பூராகவும் இலவசமாக பகிர்ந்திருப்பதனை நினைவு கூர்ந்தார். மேலும் அவரது அவ்வுரையில் நூலக நிறுவனத்தின் அனைத்து… Continue reading தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இளையதம்பி தயானந்தா ஆற்றிய உரை

யாழ் பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனம் கடந்த பதினொரு ஆண்டுகளாக இலங்கையின் பல்வேறு எழுத்தாளர்களினதும், நிறுவனங்களினதும் 15,000 க்கும் அதிகமான வெளியீடுகளை ஆவணப்படுத்தியுள்ளது. இச்செயற்பாடுகளின் மேலுமொரு மைல்கல்லாக 2014 ஆம் ஆண்டு “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையின் நூறுக்கும் மேற்பட்ட வெளியீடுகளினை மின்வருடி ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டின் ஆரம்பத்தில் முடிவுக்கு வந்திருந்தது. அவ்வெளியீடுகளை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலக வலைத்தளத்தில் திறந்த வாசிப்பிற்கு அனுமதிப்பதற்கான உத்தியோக பூர்வ அனுமதியினை 21/06/2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நூலக நிறுவன யாழ்ப்பாணக்… Continue reading யாழ் பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்

நூலக நிறுவனத்தின் அறிவுப் பகிர்தல் பாதையின் தொடர்ச்சி

Published on Author Noolaham Foundation

யாழ்/ தென்மராட்சி கல்வி வலயத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தென்மராட்சி கல்வி வலய பாடசாலை நூலகர்களுக்கான செயலமர்வு 04/07/2015 அன்று காலை 8.00மணி முதல் மாலை 4.30 மணி வரை சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. அந்நிகழ்வில் வளவாளர்களாக நூலக நிறுவன அலுவலர்கள் அழைக்கப்பட்டிருந்ததுடன் நூலக தன்னியக்கமாக்கல் மற்றும் எண்ணிம நூலகம் தொடர்பில் பூரண விளக்கத்தினை அளித்திருந்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட தென்மராட்சி கல்வி வலய ஆசிரியர்கள் பங்குபற்றி பயன்பெற்றதுடன் நூலக நிறுவனத்தினரின் செயற்றிட்டங்கள் தொடர்பில் தமது ஆதரவினை… Continue reading நூலக நிறுவனத்தின் அறிவுப் பகிர்தல் பாதையின் தொடர்ச்சி

எண்ணிம ஆவணப்படுத்தல் மற்றும் இலத்திரனியல் பள்ளிக்கூடம் நோக்கி மலையகம்

Published on Author Noolaham Foundation

‘இந்த காலத்தில் எல்லாமே கொம்பியூட்டர்தான்’ என்பதே இப்போது பலரும் உச்சரிக்கும் வசனங்களாகிப் போகுமளவுக்கு கொம்பியூட்டர் எனப்படும் கணிணியும் அதனோடு இணைந்த இணைய (இன்டர்நெட்) பாவணையும் வந்துவிட்டது. விரும்பியோ விரும்பாமலோ அந்த தொழிநுட்பம் சார்ந்து நமக்கான தெரிவுகளைச் செய்யத் தூண்டப்படுகிறோம். வீட்டுக்கு ஒரு கணிணியும் ஆளுக்கொரு தொலைபேசியும் இப்போது அத்தியாவசியமாகிவிட்டது. இணையப் பாவனை பரவலாக்கப்பட்டு கைப்பேசியிலேயேகூட இணைய வசதியைப் பெறும் நிலைமை இன்று உள்ளது. இந்த வளர்ச்சி காலகட்டத்திற்குள் நாம் எவ்வாறு நமது முன்னோக்கிய பயணத்திற்கு இந்த கணிணி… Continue reading எண்ணிம ஆவணப்படுத்தல் மற்றும் இலத்திரனியல் பள்ளிக்கூடம் நோக்கி மலையகம்