ஜெர்மனி கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் துணை இயக்குநர் டாக்டர். அஞ்சா ஓபர்லேண்டர் உள்ளிட்ட குழுவினரின் நூலக வருகை – 12.11.2024

Published on Author Loashini Thiruchendooran

நவம்பர் மாதம் 12ஆ ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, ஜெர்மனி கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் துணை இயக்குநர் டாக்டர். அஞ்சா ஓபர்லேண்டர் (Dr. Anja Oberländer, Vice-Director of Library & IT), திறந்த அறிவியல் குழுவின் தலைவர் திரு. மத்தியாஸ் லேண்ட்வேர் (Mr. Matthias Landwehr, Head of the Open Science Team), பொது மற்றும் கணக்கீட்டு மொழியியல் துறையின் பேராசிரியர் மிரியம்… Continue reading ஜெர்மனி கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் துணை இயக்குநர் டாக்டர். அஞ்சா ஓபர்லேண்டர் உள்ளிட்ட குழுவினரின் நூலக வருகை – 12.11.2024

நூலக நிறுவனத்தின் “மலாய் மொழி – அரபுத்தமிழ் சேகரம்” செயற்றிட்டம்

Published on Author Loashini Thiruchendooran

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் காணப்பட்ட மலாய் ஆவணங்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாரம்பரிய மலாய் குடும்பங்களின் வசம் காணப்படுகின்றன. இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பணியாற்றிய பேராசிரியர் Bacha Husmiya அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இவ் ஆவணங்கள், நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலுக்காக வழங்கப்பட்டு “மலாய் மொழி – அரபுத்தமிழ் சேகரம்” செயற்றிட்டம் ஊடாக எண்ணிமப்படுத்தப்பட்டுள்ளன. 1859 தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வெளியிடப்பட்ட 67 ஆவணங்கள் இப்பகுப்பினுள் தொகுக்கப்பட்டுள்ளன.… Continue reading நூலக நிறுவனத்தின் “மலாய் மொழி – அரபுத்தமிழ் சேகரம்” செயற்றிட்டம்

ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024 இல் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini Thiruchendooran

ஒக்டோபர் 30 தொடக்கம் நவம்பர் 03ஆம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மட்டக்களப்பு, ஏறாவூர் நகர் பிரதேச செயலகம், வாவிக்கரை அருகில் இடம்பெறுகின்ற “ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024” இல் நூலக நிறுவனத்தின் காட்சியறையினையும் பார்வையிடலாம். அச்சு ஆவணங்கள், பல்லூடக ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் என 5,843,832 பக்கங்களைக் கொண்ட 160,077 ஆவணங்களை ஆவணப்படுத்தியுள்ள இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை நீங்களும் தெரிந்துக் கொள்வதற்கான வாய்ப்பு. நூலகம் (www.noolaham.org) என்பதை பிரதான வலைத்தளமாகக் கொண்டு பல்லூடக நூலகம்… Continue reading ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024 இல் “நூலக நிறுவனம்”

160,000 ஆவணங்களைக் கடந்துள்ள நூலக நிறுவனம்

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆவணமாக்கப் பணிகள் மேலும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு 2024 மார்ச் மாதத்தில் 150,000 ஆக இருந்த ஆவண எண்ணிக்கை 10,000 ஆல் அதிகரித்து 160,000 இனைக் கடந்துள்ளது! இப்போது 5.8 மில்லியன் பக்கங்களைக் கொண்ட 160,000+ ஆவணங்களை எண்ணிமப்படுத்தியுள்ள நூலக நிறுவனத்தின் சுவடியாக்கப் பயணத்தில் பங்கேற்க வாருங்கள்!

நூலக நிறுவனத்தின் “முன்னோர் ஆவணகம்” செயற்றிட்டத்தின் வழிகாட்டியாக செயற்படும் திரு. சரவணன் நடராசா அவர்களின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

2024, ஒக்டோபர் மாதம் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, நோர்வே இலிருந்து நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு நீண்ட காலமாகப் பங்களித்து வரும் திரு. நடராசா சரவணன் அவர்கள் வருகை தந்திருந்தார்.  நூலக நிறுவனம் அதனது ஆவணப்படுத்தல் பணிகள் தொடர்பில் ஏற்கனவே நன்கறிந்த இவர், முன்னோர் ஆவணகம் மற்றும் ஈவ்லின் ரத்தினம் செயற்றிட்டங்களின் முன்னெடுப்பிற்கு தொடர்ச்சியாக ஆலோசனைகள் வழங்கி வருகின்றார். அதுமட்டுமன்றி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில்… Continue reading நூலக நிறுவனத்தின் “முன்னோர் ஆவணகம்” செயற்றிட்டத்தின் வழிகாட்டியாக செயற்படும் திரு. சரவணன் நடராசா அவர்களின் நூலக வருகை

நூலக நிறுவனத்தின் Digital Library & Archive (Information Architecture) இன் Process Mentor திரு. நடராஜா செல்வராஜா அவர்களின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

18.09.2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு நீண்ட காலமாகப் பங்களித்து வரும் ஈழத்து நூலகவியலாளரான  திரு. நடராஜா செல்வராஜா அவர்கள் வருகை தந்திருந்தார்.  நூலக நிறுவனம் அதனது ஆவணப்படுத்தல் பணிகள் தொடர்பில் ஏற்கனவே நன்கறிந்த இவர், “எண்ணிம நூலக மற்றும் ஆவணகம் துறை” சார்ந்த அனைத்து முன்னெடுப்புகளிலும் பங்களித்து வருகிறார். ஆவணங்களுக்கான அனுமதி பெறல், அரிய ஆவணங்களின் ஆவணமாக்கம், நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இதழ்கள், சஞ்சிகைகள் பற்றிய தெளிவுப்படுத்தல் என… Continue reading நூலக நிறுவனத்தின் Digital Library & Archive (Information Architecture) இன் Process Mentor திரு. நடராஜா செல்வராஜா அவர்களின் நூலக வருகை

நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலில் வட இலங்கை மருத்துவ வரலாறு

Published on Author Loashini Thiruchendooran

இலங்கையின் மருத்துவ வரலாறு பல நூற்றாண்டுகளாக பல உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற காரணிகளின் தொகுப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது, அவற்றில் சில நாட்டிற்கு தனித்துவமானவை. அத்தகைய மருத்துவ வரலாறு, வட இலங்கையைப் பொறுத்தவரையில் எத்தகைய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது என்பதனை ஆவணப்படுத்துவதற்காக நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டமே “வட இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம்” (History of Medicine in Northern Sri Lanka Collection) . பொதுவாக மக்களுக்கு வரலாற்றின் முக்கியத்துவம் தெரியாதிருப்பினும், இச்செயற்றிட்டம் மருத்துவ வரலாறு மற்றும்… Continue reading நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலில் வட இலங்கை மருத்துவ வரலாறு