மட்டக்களப்பு புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவனம் – 2023

Published on Author Loashini Thiruchendooran

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகமும் மட்டக்களப்பு மாநகர பொது நூலகமும் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் 28,29,30 ஆந் திகதிகளில் முற்பகல் 09:15 மணி தொடக்கம் மாலை 07:15 மணி வரைக்கும் மட்டுநகர் காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவிக்கரையினை அண்டியுள்ள பொது நூலக வளாகத்தில் நடத்திய மட்டக்களப்பு புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவனமும் பங்குபற்றியது.              சர்வதேச புத்தகத் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இக்கண்காட்சியில் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்துள்ள நூல்கள், சஞ்சிகைகள்,… Continue reading மட்டக்களப்பு புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவனம் – 2023

நூலக நிறுவனத்தின் புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப்பட்டறை

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயன்முறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் தன்னார்வலர்களுக்கான புகைப்பட ஆவணமாக்கல் பயிற்சிப்பட்டறை ஏப்ரல் 02 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை யாழ்ப்பாணம், சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெற்றது. சுரேன் போடோகிராஃப்பியின் நிறுவனரும் தகவல் தொழிநுட்பம் மற்றும் ஊடகக் கற்கைகள் விரிவுரையாளரான சுரேந்திரகுமார் கனகலிங்கம் அவர்கள் வளவாளராக செயற்பட்டு புகைப்படம் ஆவணமாக்கல் சம்பந்தமான பல கருத்துக்களை வழங்கியிருந்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், ஆவணப்படுத்துனர்கள், கணினித்துறை நிபுணர்கள்… Continue reading நூலக நிறுவனத்தின் புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப்பட்டறை

புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப் பட்டறை (Photography Documentation : WORKSHOP)

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயன்முறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் தன்னார்வலர்களுக்கான புகைப்பட ஆவணமாக்கல் பயிற்சிப்பட்டறை நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 02 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை யாழ்ப்பாணம், சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும். இப்பயிற்சிப்பட்டறையில் சுரேன் போடோகிராஃப்பியின் நிறுவனரும் தகவல் தொழிநுட்பம் மற்றும் ஊடகக் கற்கைகள் விரிவுரையாளருமான சுரேந்திரகுமார் கனகலிங்கம் அவர்கள் வளவாளராக கலந்துகொள்வார். ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள கூகுள் படிவத்தை பூரணப்படுத்தவும் https://forms.gle/C1oYpJqas4xZ7F8u5     … Continue reading புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப் பட்டறை (Photography Documentation : WORKSHOP)

நூலக நிறுவன வேலைவாய்ப்பு – கள ஆய்வாளர் / Field Researcher – இலங்கை முஸ்லிம் எப்ஃபமேரா தொகுப்பு

Published on Author Loashini Thiruchendooran

  பணி வெற்றிடம் நூலக நிறுவனமானது (noolahamfoundation.org) இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படுத்தும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். 2005 முதல் இலங்கையின் முதன்மையான தமிழ் எண்ணிம ஆவணக் காப்பகமாகத் திகழும் நூலக நிறுவனம் இதுவரை பல்வேறு செயற்றிட்டங்களூடாக 100,000 இற்கும் அதிகமான ஆவணங்களை எண்ணிம வடிவங்களில் பதிவு செய்துள்ளது. நூல்கள், சஞ்சிகைகள்,… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்பு – கள ஆய்வாளர் / Field Researcher – இலங்கை முஸ்லிம் எப்ஃபமேரா தொகுப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழிற்சந்தையில் நூலக நிறுவனம்

Published on Author Loashini Thiruchendooran

03.03.2023 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொழிற்சந்தையில் நூலக நிறுவனமும் கலந்து கொண்டது. பெருமளவிலான தொழில் நிறுவனங்கள் பங்குகொண்ட இத்தொழிற் சந்தையில் நூலக நிறுவனம் சார்பில் நிறுவன பிரதம நிறைவேற்று அலுவலகர் றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்கள் கலந்துகொண்டு தொழில் வாய்ப்புகள் பற்றிய விளக்கத்தை வழங்கினார். இந்நிகழ்வில் 100 இற்கும் மேற்பட்ட தொழில் தேடுநர்கள் நூலக நிறுவனம் மற்றும் அதனது செயற்பாடுகள் பற்றி அறிந்து கொண்டதுடன் தம்மை பதிவு செய்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.       … Continue reading யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழிற்சந்தையில் நூலக நிறுவனம்

நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வும் 19ஆவது ஆண்டு ஆரம்ப சந்திப்பும்

Published on Author Loashini Thiruchendooran

பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி 15, 2005 அன்று ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டு 130,545 ஆவணங்களுடனும் 4,631,372 பக்கங்களுடனும் தனது 19ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கிற நூலக நிறுவனம், பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான ‘தைப் பொங்கல்’ மற்றும் நூலக நிறுவனத்தின் 19ஆவது ஆண்டு ஆரம்ப விழா என்பவற்றை சுண்டுகுளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக அலுவலகத்தில் 15 ஜனவரி 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று உற்சாகத்துடன் கொண்டாடியது. நூலக நிறுவனப் பணியாளர்கள் மற்றும் நூலகத் தன்னார்வலர்கள் ஆகியோர் இப்பொங்கல்… Continue reading நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வும் 19ஆவது ஆண்டு ஆரம்ப சந்திப்பும்

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் – 2022

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடலானது 25.11.2022 – 26.11.2022 வரையிலான காலப்பகுதியில் இரண்டு நாட்கள் பயணமாகத் திருகோணமலையில் இடம்பெற்றது. இப்பயணத்தில் நூலக நிறுவனப் பணியாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களிடையே வேடிக்கையான விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன. இப்பயணத்தின் முதல் நாள், # திருகோணமலை ஸ்ரீ லக்‌ஷ்மி நாராயனப் பெருமாள் கோவில் # ஸ்ரீ திருக்கோணேஸ்வரம் கோவில் # சீனக்குடா துறைமுகம் # நிலாவெளி கடற்கரை போன்ற இடங்களும் இரண்டாம் நாள், # திருகோணமலை மாபல் கடற்கரை # கண்ணியா வெந்நீரூற்று என்பனவும் பார்வையிடப்பட்டன.  … Continue reading நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் – 2022