புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப் பட்டறை (Photography Documentation : WORKSHOP)

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயன்முறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் தன்னார்வலர்களுக்கான புகைப்பட ஆவணமாக்கல் பயிற்சிப்பட்டறை நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 02 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை யாழ்ப்பாணம், சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும். இப்பயிற்சிப்பட்டறையில் சுரேன் போடோகிராஃப்பியின் நிறுவனரும் தகவல் தொழிநுட்பம் மற்றும் ஊடகக் கற்கைகள் விரிவுரையாளருமான சுரேந்திரகுமார் கனகலிங்கம் அவர்கள் வளவாளராக கலந்துகொள்வார். ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள கூகுள் படிவத்தை பூரணப்படுத்தவும் https://forms.gle/C1oYpJqas4xZ7F8u5     … Continue reading புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப் பட்டறை (Photography Documentation : WORKSHOP)

நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வும் 19ஆவது ஆண்டு ஆரம்ப சந்திப்பும்

Published on Author Loashini Thiruchendooran

பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி 15, 2005 அன்று ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டு 130,545 ஆவணங்களுடனும் 4,631,372 பக்கங்களுடனும் தனது 19ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கிற நூலக நிறுவனம், பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான ‘தைப் பொங்கல்’ மற்றும் நூலக நிறுவனத்தின் 19ஆவது ஆண்டு ஆரம்ப விழா என்பவற்றை சுண்டுகுளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக அலுவலகத்தில் 15 ஜனவரி 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று உற்சாகத்துடன் கொண்டாடியது. நூலக நிறுவனப் பணியாளர்கள் மற்றும் நூலகத் தன்னார்வலர்கள் ஆகியோர் இப்பொங்கல்… Continue reading நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வும் 19ஆவது ஆண்டு ஆரம்ப சந்திப்பும்

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் – 2022

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடலானது 25.11.2022 – 26.11.2022 வரையிலான காலப்பகுதியில் இரண்டு நாட்கள் பயணமாகத் திருகோணமலையில் இடம்பெற்றது. இப்பயணத்தில் நூலக நிறுவனப் பணியாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களிடையே வேடிக்கையான விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன. இப்பயணத்தின் முதல் நாள், # திருகோணமலை ஸ்ரீ லக்‌ஷ்மி நாராயனப் பெருமாள் கோவில் # ஸ்ரீ திருக்கோணேஸ்வரம் கோவில் # சீனக்குடா துறைமுகம் # நிலாவெளி கடற்கரை போன்ற இடங்களும் இரண்டாம் நாள், # திருகோணமலை மாபல் கடற்கரை # கண்ணியா வெந்நீரூற்று என்பனவும் பார்வையிடப்பட்டன.  … Continue reading நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் – 2022

யாழில் சுவடி ஆவணப்படுத்தல் கண்காட்சி

Published on Author தண்பொழிலன்

வட இலங்கையின் சுவடிச்சேகரங்களை எண்ணிமப்படுத்தும் செயற்றிட்டமானது, இங்கிலாந்தின் ஆபத்துக்குள்ளான சுவடிக்காப்பகத் திட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவருகின்றது. இதன் ஒரு பாகமாக, சுவடிகளை ஆவணப்படுத்துவது எவ்வாறு என்பதை விவரிக்கும் கண்காட்சி ஒன்று நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 12 (வெள்ளி) முதல் 14 (ஞாயிறு) வரை இது கொக்குவில் ஆடிய பாதம் வீதியிலுள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும்.     ஆய்வு, ஆவணப்படுத்தல், மரபுரிமை தொடர்பான ஆர்வமுள்ள அனைவரதும் வருகையினை நூலக நிறுவனம் எதிர்பார்க்கிறது

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து கடந்த சனிக்கிழமையன்று (16 ஜூன் 2018) நடத்திய பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறையானது மிகவும் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்திருந்தது. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்களால், பயிற்சிக்கு வந்திருந்த ஆர்வலர்களுக்கு, பல்வேறு நிலைகளில் (நல்ல நிலையில் உள்ளவை, கறையான் அரித்தவை, தெளிவானவை, தெளிவற்றவை) கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள் பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டன. ஓலைச்சுவடிகளைத் தூய்மைப்படுத்தும் வழிவகைகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் பற்றிய விளக்கங்களின் பின்னர் ஓலைச்சுவடிகளை வாசிக்கும் வழிமுறைகளும்… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

Published on Author தண்பொழிலன்

‘அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்றினை ஒழுங்கு செய்திருக்கின்றன. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள்  (முந்நாள் உயிரியல் துறைத் தலைவர், விவசாயபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இடம்: அண்ணாமலை கனடா (101-1240 Ellesmere Rd, Scarborough, ON M1P 2X4) காலம்: சனிக்கிழமை (16 ஜூன் 2018) பி.ப. 1.00 முதல் பி.ப. 3.00 வரை பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

திருகோணமலையில் விக்கிப்பீடியா – நூலகம் பட்டறை நவம்பர் 26, 2017

Published on Author தண்பொழிலன்

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் ஆகியன இணைந்து எதிர்வரும்  நவம்பர் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில்  ஒரு முழுநாட்பட்டறையை  நிகழ்த்த இருக்கின்றன. இப்பயிற்சிப்பட்டறையானது, இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது. வரோதய நகரின் கன்னியா வீதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில், ஞாயிறு பகல் 9 மணி முதல் மாலை 2 மணி வரை இப்பட்டறை இடம்பெறும். நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பொதுவகம், ஆவணகம்,  தொழிற்கலை ஆவணப்படுத்தலுக்கான அறிமுகம்,  நூலகத்தின் பிரதான செயற்றிட்டங்கள்… Continue reading திருகோணமலையில் விக்கிப்பீடியா – நூலகம் பட்டறை நவம்பர் 26, 2017