திருகோணமலையில் விக்கிப்பீடியா – நூலகம் பட்டறை நவம்பர் 26, 2017

Published on Author தண்பொழிலன்

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் ஆகியன இணைந்து எதிர்வரும்  நவம்பர் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில்  ஒரு முழுநாட்பட்டறையை  நிகழ்த்த இருக்கின்றன. இப்பயிற்சிப்பட்டறையானது, இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது. வரோதய நகரின் கன்னியா வீதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில், ஞாயிறு பகல் 9 மணி முதல் மாலை 2 மணி வரை இப்பட்டறை இடம்பெறும். நிகழ்வில், தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பொதுவகம், ஆவணகம்,  தொழிற்கலை ஆவணப்படுத்தலுக்கான அறிமுகம்,  நூலகத்தின் பிரதான செயற்றிட்டங்கள்… Continue reading திருகோணமலையில் விக்கிப்பீடியா – நூலகம் பட்டறை நவம்பர் 26, 2017

நூலக நிறுவனத்தின் 2018 ம் ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந் திரட்டல்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள், ஆண்டுத் திட்டமிடல் மற்றும் வரவுசெலவை (Annual Plan and Budget) முன்வைத்தும், அதற்குத் தேவையான வளங்களை வளந் திரட்டுதல் திட்டம் (Resource Mobilization Plan) ஊடாகவும் முன்னெடுக்கின்றன.  இந்தப் பொறிமுறை நூலக நிறுவனமயாக்கச் செயற்பாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.  நாம் இந்தப் பொறிமுறையை கூடிய நேர்த்தியுடன் கடந்த சில ஆண்டுகளில் பின்பற்றி வருகிறோம். நூலக நிறுவனத்தின் 2018 ஆம் ஆண்டு திட்டமிடல் தற்போது தொடங்கி உள்ளது.  2017 பல… Continue reading நூலக நிறுவனத்தின் 2018 ம் ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந் திரட்டல்

பல்லூடக ஆவணக வளர்ச்சி

Published on Author Noolaham Foundation

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பல்லூடக ஆவணகம் பல பரிணாமங்களில் வளர்ச்சி பெற்று வருகின்றது. ஜெயரூபி சிவபாலன், குலசிங்கம் வசீகரன், இ. மயூரநாதன், ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம், பிரபாகர் நடராசா, தமிழினி, ச. சாந்தன் உட்பட்ட பல பங்களிப்பாளர்களின் தன்னார்வப் பங்களிப்பால் நூலக ஒளிப்படச் சேகரம் 1,100 படங்களை தாண்டியுள்ளது.  இந்தப் படங்கள் சமூக வரலாற்று கல்வி முக்கியத்துவம் வாந்த படங்கள்.  பெரும்பாலானவை ஆவணக தரத்தில் (archival quality) அமைந்தவை.  இவர்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துகளும். இலங்கைத் தமிழ்… Continue reading பல்லூடக ஆவணக வளர்ச்சி

விக்கிப்பீடியா – நூலகம் இணைந்து ஹட்டனில் பயிற்சிப் பட்டறை

Published on Author Vijayakanthan

விக்கிப்பீடியா, நூலகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 28.08.2017 திங்கட்கிழமையன்று மலையகத்தில் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தினர். இப்பயிற்சிப்பட்டறை ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் இணைந்து முன்னெடுக்கும் ”இலங்கையின் கிழக்கு – வடக்கு – மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்” எனும் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே மேற்படி பயிற்சி பட்டறை மலையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், ஆவணப்படுத்துனர்கள், கணிணித்துறை நிபுணர்கள் மற்றும்… Continue reading விக்கிப்பீடியா – நூலகம் இணைந்து ஹட்டனில் பயிற்சிப் பட்டறை

உத்தமம் 16 வது தமிழ் இணைய மாநாடு – இணைப்புத் தரவுக்கான மெய்ப்பொருளியம் நோக்கி

Published on Author Noolaham Foundation

உத்தமம் 16 வது தமிழ் இணைய மாநாடு ரொறன்ரோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25 – 27 திகதிகளில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் தமிழ் எண்ணிம நூலகங்கள், ஆவணங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றோடு தொடர்புடைய சீர்தரங்கள் தொழிநுட்பங்களை ஆயவும் அறிவுப் பகிர்வு செய்வதற்கான ஒரு களத்தை அமைத்தல் தொடர்பாக உரையாடப்பட்டது. அந்த மாநாட்டில் நூலக நிறுவனம் சார்பாக நற்கீரன் அவர்கள் “தமிழ்ச் சூழலில் திறந்த இணைப்புத் தரவுக்கான மெய்ப்பொருளிய உருவாக்கம் நோக்கி” என்ற ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார், நிகழ்த்தலையும்… Continue reading உத்தமம் 16 வது தமிழ் இணைய மாநாடு – இணைப்புத் தரவுக்கான மெய்ப்பொருளியம் நோக்கி

ஆவணஞானி குரும்பச்சிட்டி இரா. கனகரட்ணம் நினைவு நிகழ்வு நிகழ்த்தல் – கனடா

Published on Author Noolaham Foundation

ஆவணஞானி குரும்பச்சிட்டி இரா. கனகரட்ணம் அவர்கள் ஒரு முன்னோடி தமிழ் ஆவணகக் காப்பாளர் (Archivist) ஆவார்.  இவர் ஈழத்து வரலாற்று, அரசியல், பண்பாட்டு முக்கியத்துவம் வாய்த ஒரு பெரும் சேகரிப்பை 50 ஆண்டுகளுக்கு மேலாகா முன்னின்று முன்னெடுத்தவர்.  ஆவணம், ஆவணப்படுத்தல், ஆவணகம் பற்றி போதிய விழிப்புணர்வு தமிழ்ச் சூழலில் இல்லாத ஒரு சூழலில் இவர் இப் பணியை முன்னெடுத்து இருந்தார்.  மேலும், இவர் உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றி அங்கு போய் தகவல் சேகரித்தார்,… Continue reading ஆவணஞானி குரும்பச்சிட்டி இரா. கனகரட்ணம் நினைவு நிகழ்வு நிகழ்த்தல் – கனடா

த. சீனிவாசனுக்கு தமிழ் இலக்கியத் தோட்ட தமிழ்க் கணிமை விருது

Published on Author Noolaham Foundation

தமிழ்ச் சூழலில் கட்டற்ற இயக்கத்தை (Free Software and Free Culture Movement) கொள்கையிலும் செயலிலும் முன்நகர்த்திச் செல்வதில் முதன்மையான ஒரு பங்களிப்பாளரான த. சீனிவாசனுக்கு 2016 இக்கான தமிழ் இலக்கியத் தோட்டத்தின் “தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது” கிடைத்துள்ளது.  இது அவரது பரந்த பங்களிப்புக்கான ஒரு சிறு அங்கீகரிப்பே.  அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.  தமிழ்க் கணிமைக்கு அவரது விரிவான பங்களிப்பை பற்றி இங்கும், இங்கும் மேலும் அறியலாம். களத்தில் உள்ள தமிழ்க் கணிமை… Continue reading த. சீனிவாசனுக்கு தமிழ் இலக்கியத் தோட்ட தமிழ்க் கணிமை விருது