நூலக நிறுவன வேலைவாய்ப்பு – எண்ணிம நூலக அலுவலர் / Digital Library Officer

Published on Author Loashini Thiruchendooran

பணி வெற்றிடம் நூலக நிறுவனமானது (noolahamfoundation.org) இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படுத்தும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். 2005 முதல் இலங்கையின் முதன்மையான தமிழ் எண்ணிம ஆவணக் காப்பகமாகத் திகழும் நூலக நிறுவனம் இதுவரை பல்வேறு செயற்றிட்டங்களூடாக 100,000 இற்கும் அதிகமான ஆவணங்களை எண்ணிம வடிவங்களில் பதிவு செய்துள்ளது. நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள்,… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்பு – எண்ணிம நூலக அலுவலர் / Digital Library Officer

நூலக நிறுவன வேலைவாய்ப்பு – கள ஆய்வாளர் / Field Researcher

Published on Author Safna Iqbal

  Job Title – பணித் தலைப்பு கள ஆய்வாளர் / Field Researcher (02 பணியாளர்கள் Reports To – அறிக்கையிடல் தலைமை செயற்பாட்டு அலுவலகர் / Chief Operating Officer  Instructions From – நெறிமுறைகள் பெறுப்படுதல் தலைமை செயற்பாட்டு அலுவலகர் / Chief Operating Officer  Pay Band / ஊதியம் 25,000 – 35,000 (தகுதிக்கு ஏற்ப)  Base Location – பணி இடம் மன்னார் (முதன்மை); புத்தளம், வவுனியா ஆகிய… Continue reading நூலக நிறுவன வேலைவாய்ப்பு – கள ஆய்வாளர் / Field Researcher

நூல்களால் கட்டும் தேசம்

Published on Author Safna Iqbal

  ‘நூல்களால் கட்டும் தேசம்’ எனும் தலைப்பில் அமையும் இக் கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு பத்திரிகையின் 2020, ஏப்ரல் வெளியீட்டில் (பக்கங்கள் 92-96) பிரசுரமாகியுள்ளது. எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்துக்களையும் மதிப்பிட்டு எழுதும் கட்டுரைகளுக்கு மாறாக இலக்கியச் செயற்பாட்டாளர்களின் வரலாற்று வகிபாகத்தைப் பத்மநாப ஐயரை முன்நிறுத்தி ஆராய்கிறது. பண்பாட்டு விடுதலைக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தில் எழுத்தரசியலின் முக்கியத்துவத்துவத்தினை உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளின் பின்னணியில் நோக்கி, யாழ்ப்பாணம் பொதுநூலக எரிப்புக்குப் பின்னர் நூலகப் பண்பாட்டு மேலெழுகையிலும் தமிழ்த்… Continue reading நூல்களால் கட்டும் தேசம்

நூலக நிறுவனத்தில் பணி வாய்ப்புக்கள்

Published on Author Noolaham Foundation

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத்தளங்களை எண்ணிம முறையில் ஆவணப்படுத்தி, பாதுகாத்து மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட உள்ளார்ந்து ஆர்வம் கொண்டவர்களுக்கு நூலக யாழ்ப்பாண அலுவலகத்தின் இரு பணி வாய்ப்புக்களைப் பற்றி கீழே அறியத் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஒலிநூற் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் / Audio Books Project Coordinator தொடர்பாடல் அலுவலகர் / Communication Officer விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: noolahamfoundation@gmail.com அனுப்ப வேண்டிய இறுதித் திகதி: சனவரி 19, 2020 மேலும்… Continue reading நூலக நிறுவனத்தில் பணி வாய்ப்புக்கள்

ஈழத்து நூலகவியலின் வழிகாட்டி சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்களை இழந்தோம்

Published on Author Noolaham Foundation

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகவும் நமது நூலக நிறுவனத்தின் (Noolaham Foundation) ஒரு தன்னார்வப் பணிப்பாளராகவும் பங்காற்றிய சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள்  25 மார்கழி 2019 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானர் என்ற துயரச்செய்தியைப் பகிர்ந்து கொள்கின்றோம். நூல்கள், நூலகங்கள், நூலகவியல் துறையை நெருக்கமாக ஆழமாக நேசித்த, சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகரும் நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் அமைப்பாளரும் (Founder, Foundation for Library Awareness) அறிதூண்டல் மையத்தின் இயக்குநரும் (Director, Knowledge Stimulation… Continue reading ஈழத்து நூலகவியலின் வழிகாட்டி சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்களை இழந்தோம்

“தண்டை முழங்கு”க்கு நூலக நன்றிகள்

Published on Author Noolaham Foundation

ஆசிரியை நாட்டியகலைமாமணி மாலினி பரராஜசிங்கம் அவர்களின் “தண்டை முழங்கு” இசை நடன விழா கடந்த டிசம்பர் 7, 2019 அன்று ஸ்கார்புரோ தமிழிசைக் கலாமன்றத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுவில் நூலக நிறுவனம் பற்றி அறிமுகம் வழங்க வாய்ப்பு வழங்கியதோடு, நிகழ்வின் ஊடாக நிதிப் பங்களிப்பும் வழங்கப்பட்டது. நூலக நிறுவனத்தின் நோக்கம், செயற்பாடுகள் பற்றி நூலகம் கனடா தன்னார்வலர் வல்லிபுரம் சுகந்தன் அவர்கள் உரை வழங்கினார்.  வாய்ப்புக்கும் பங்களிப்புக்கும் நூலக நிறுவனம் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகள். ஆசிரியை… Continue reading “தண்டை முழங்கு”க்கு நூலக நன்றிகள்

யாழில் தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ம் ஆண்டு கொண்டாட்டங்கள்

Published on Author Noolaham Foundation

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பதினாறாம் ஆண்டு நிறைவையொட்டி யாழில் ஒக்ரோபர் 19, 20 ம் திகதிகளில் சிறப்பான கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.  இந்தியாவில் இருந்து 20 மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டது இதன் சிறப்பு ஆகும்.  தமிழ் விக்கிப்பீடியா உலகத் தமிழ் பேசும் சமூகங்களின் ஒர் இணைப்புத் தளமாக தொடர்ந்து செயற்பட்டு, அந்த உறவுப் பாலத்தை மேலும் பலப்படுத்தி வருகிறது. 2003 காலப் பகுதியில் திறந்த இணையம் (Open Web) பலமாக இருந்தது.  தமிழ் வலைப்பதிவுகள், மன்றங்கள்,… Continue reading யாழில் தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ம் ஆண்டு கொண்டாட்டங்கள்