யாழில் தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ம் ஆண்டு கொண்டாட்டங்கள்

Published on Author Noolaham Foundation

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பதினாறாம் ஆண்டு நிறைவையொட்டி யாழில் ஒக்ரோபர் 19, 20 ம் திகதிகளில் சிறப்பான கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.  இந்தியாவில் இருந்து 20 மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டது இதன் சிறப்பு ஆகும்.  தமிழ் விக்கிப்பீடியா உலகத் தமிழ் பேசும் சமூகங்களின் ஒர் இணைப்புத் தளமாக தொடர்ந்து செயற்பட்டு, அந்த உறவுப் பாலத்தை மேலும் பலப்படுத்தி வருகிறது. 2003 காலப் பகுதியில் திறந்த இணையம் (Open Web) பலமாக இருந்தது.  தமிழ் வலைப்பதிவுகள், மன்றங்கள்,… Continue reading யாழில் தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ம் ஆண்டு கொண்டாட்டங்கள்

Noolaham Foundation preserves the past to enrich the future – lankabusinessonline.com

Published on Author Noolaham Foundation

எழுத்தாளர், ஊடகவியலாளர் ஜெகன் அருளையா அவர்கள் “Noolaham Foundation preserves the past to enrich the future” என்ற ஒரு விரிவான ஆங்கிலக் கட்டுரையை லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் செய்தித் தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இக் கட்டுரை நூலக நிறுவனத்தின் நோக்கங்கள், விழுமியங்கள், பணிகள், தேவைகள், எதிர்காலத் திட்டம் உட்பட்ட தகவல்களைப் பகிர்கிறது.  பொறுமையாகத் தகவல்களைப் பெற்று தொகுத்து வெளியிட்ட ஜெகன் அவர்களுக்கு எமது நன்றிகள்.

நூலகத்தின் பாடசாலை ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் சிலாகிக்கப்பட்டது 96 திரைப்படம். அதன் வெற்றிக்கும் சிறப்புக்கும் பல காரணங்கள் கூறப்பட்டாலும்,  எல்லோரது வாழ்க்கையிலுமே மறக்க முடியாத பள்ளிப்பருவத்தை அத்திரைப்படம் சித்தரித்திருந்த விதமே அப்படத்தை அதிக கவனிப்புக்குள்ளாக்கி இருந்தது. ஆனால் அத்திரைப்படம் வெளிவருவதற்கு பல ஆண்டுகள் முன்பேயே நம் நூலகம், அத்தகைய ஒரு முயற்சியை ஆரம்பித்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பள்ளிக்காலம் என்பது எல்லோருக்கும் மறக்கமுடியாத நினைவுகளைத் தந்துசெல்லும் ஒன்று. வகுப்பறைகளாக, நடைபாதைகளாக, மரத்தடிகளாக, பாடசாலைகள் நம் எல்லோர் மனதிலும்… Continue reading நூலகத்தின் பாடசாலை ஆவணப்படுத்தல் திட்டம்

ஏழாலை | ஊர் வலம் 01

Published on Author தண்பொழிலன்

சமூகமொன்றின் இருப்புக்கு வரலாறும் பண்பாடும் அத்தியாவசியமானது. வரலாறு, மற்றும் தொல்லியல் சான்றுகளை, அறியாமையாலும் வேறு புறக்காரணிகளாலும் நாம் கைவிட்டுச் செல்லும் இந்தக் காலத்தில், அவற்றை எதிர்காலத்துக்குக் கடத்த முடியாவிட்டாலும், ஆவணப்படுத்தியாவது வைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நம் சமூக அலகுகளில்  ‘ஊர்’ என்பது முக்கியமான ஒன்று. அந்த மட்டத்திலேயே ஆவணப்படுத்தலை மேற்கொள்வது சிறப்பானது. ஊர் ஆவணப்படுத்தலை இன்னொருவர் செய்யாது, அந்தந்த ஊரவரே செய்யும் போது, அதன் பெறுமதி அதிகமாக இருக்கும். நம்பகத்தன்மை, சரிபிழை முதலிய பல தகவல்களையும் அதனுடன் இணைத்து ஆராயக்கூடியதாக… Continue reading ஏழாலை | ஊர் வலம் 01

அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வெளியீடுகள் ,மாகாண, வலய மட்ட பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் பரிகார கற்றல் கையேடுகள் உட்பட மாணவர் கற்றல் கற்பித்தல் சார் விடயங்கள் போன்றவற்றை சேகரித்து எண்ணிமப்படுத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான எழுத்து மூல அனுமதியை வடமாகாண கல்வித்திணைக்களத்திடமிருந்து பெற்றுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சுற்றறிக்கை மூலம் வட மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் வலயப்பாடசாலை அதிபர்களை கேட்டுள்ளார்.   இதன் முதற்கட்டமாக , துணுக்காய்… Continue reading அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

வரலாறு என்றால், நாமெல்லாம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, என்று பட்டியல் வாசிப்போம். இதே கேள்வியை தொன்மையான வரலாற்றுக் குடியிருப்புகள் என்றால், மதுரை, தஞ்சை, காஞ்சி என்றோ, கீழடி, ஆதிச்சநல்லூர் என்றோ மீண்டும் தமிழகத்திலேயே போய் நிற்போம்.   கொஞ்சம் விடயம் தெரிந்தவர் என்றால் யாழ்ப்பாண இராச்சியம், வன்னிச் சிற்றரசுகள், மட்டக்களப்பு வன்னிமைகள் திருக்கோணமலை, கந்தரோடை, பொம்பரிப்பு, என்று இங்குள்ள பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுவோம். . இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் பிறந்த ஊரின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? தமிழரின் வரலாற்றுக் குடியிருப்புகளில் உங்கள் ஊரின் பெயரையும்… Continue reading நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்

யாழில் SETME2018 ஆய்வரங்கு

Published on Author தண்பொழிலன்

“தொழிநுட்ப உலகில், எதிர்வரும் காலம், நான்காவது கைத்தொழில் புரட்சிக்காலமாக இனங்காணப்படுகின்றது. இக்காலத்தில், இலத்திரனியலின் செல்வாக்கு மேலும் வீரியமாக எமது வாழ்க்கையைப் புரட்டிப்போடுமளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்வுகூறப்படுகிறது. உதாரணமாக புதிய, முன்னெப்போதும் பெரிதும் அறிந்திராத the Internet of Things, autonomous vehicles, 3-D printing, nanotechnology, biotechnology, materials science, energy storage, and quantum computing போன்ற தொழில்நுட்பங்கள் கோலோச்சத் தொடங்கியிருக்கின்றன. இவை எப்போதுமில்லாத புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதோடு அவற்றுக்குத் தேவையான, எதிர்ப்பார்க்கப்படும் திறன்களும்… Continue reading யாழில் SETME2018 ஆய்வரங்கு