நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 19.03.2024

Published on Author Loashini Thiruchendooran

19 மார்ச் 2024, செவ்வாய்க்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்குக் கனடாவிலிருந்து இ. இளஞ்செழியன் அவர்கள் வருகை தந்திருந்தார்.        இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் நிறுவனத்தின் செயற்பாட்டுசார் வளர்ச்சியில் தானும் பங்களிப்பதாயும் குறிப்பிட்டு இருந்தார். இவருடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலகர் திருமதி. றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்களும், எண்ணிமமாக்கமும்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 19.03.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 04.03.2024

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, கனடாவில் இறக்குமதி மற்றும் விநியோகம் (Import & Distribution) சார்ந்த வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற பி.கஜேந்திரன் அவர்கள் 04.03.2024 திங்கட்கிழமை அன்று வருகை தந்திருந்தார்.  இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகள், நூலக நிறுவனத்தின் பெளதீக ஆவணங்கள் (Physical Repository), நூலக நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான பத்திரிகைகள், நூல்கள் போன்றவற்றையும் பார்வையிட்டதுடன், நூலக செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார்.     இவருடனான சந்திப்பில், நூலக நிறுவனத்தின்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 04.03.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் Yarl IT Hub மற்றும் யாழ்பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய FiTEN Yarl 2024 மாநாடு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, இலங்கைக்கு வந்திருந்த வட அமெரிக்க தமிழ்ச் சங்க கூட்டமைப்பு (Federation of Tamil Sangams of North America – FeTNA) உறுப்பினர்கள் மற்றும் நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான திரு. சசீவன் கணேசானந்தன் அவர்களும் 19 ஜனவரி 2024, வெள்ளிக்கிழமை அன்று யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள நூலக… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

யாழ்ப்பாண பொது நூலகத்துடன் இணைந்து செய்கின்ற நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டத்திற்கு அனுசரணை வழங்கும் மனித நேயம் அமைப்பின் உறுப்பினரான திரு. மித்திரன் அவர்களும், அவரது உதவியாளரும், நூலக நிறுவனத்தின் ஆளுகை சபை உறுப்பினரான திரு. சசீவன் கணேசானந்தன் அவர்களும் 18 ஜனவரி 2024, வியாழக்கிழமை அன்று யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தனர்.  இவர்கள் நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கும் மனித நேயம் அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவு… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் நலன்விரும்பிகளுள் ஒருவரான பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா அவர்கள், 15.12.2023 வெள்ளிக்கிழமை நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.               அவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நூலகச் செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் 2021 ஆம் ஆண்டிலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் தன்னார்வலராகச் செயற்பட்டுவரும் அவர், நூலகத்தின் “முஸ்லிம் ஆவணகம்” செயற்றிட்டத்திலும் பங்களிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மலாய் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

ஆவணப்படுத்தலுக்கான புத்தக அன்பளிப்பு

Published on Author Loashini Thiruchendooran

கனடா ரொரொண்டோவில் வசித்து வருகின்ற நூலக நிறுவன நலன்விரும்பிகளுள் ஒருவரான பி.ஜெ. டிலிப்குமார் அவர்கள், கடந்த 03.10.2023 அன்று தன்னிடமுள்ள 248 நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டிற்காக அன்பளிப்பு செய்திருக்கிறார். கிளிநொச்சியில் வசிக்கும் தனது சகோதரனான கருணாநிதி அவர்களின் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள நூலக அலுவலகத்தில் நேரடியாக கையளிக்கச் செய்திருக்கிறார். இவற்றுள் நூல்கள், இதழ்கள், நினைவு மலர்கள் மற்றும் பத்திரிகைகள் என்பன காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   இந்நிகழ்வில் றஞ்சுதமலர் நந்தகுமார் (பிரதம நிறைவேற்று அலுவலகர்), மியூரி கஜேந்திரன்… Continue reading ஆவணப்படுத்தலுக்கான புத்தக அன்பளிப்பு

எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Loashini Thiruchendooran

  எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி அவர்கள் தமது நூல்களையும், அவற்றை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும் நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். அவரது நூல்கள்:-   பழந்தமிழர் நடுகற் பண்பாடு பண்டைத்தமிழர் பண்பாட்டுக்கோலங்கள் பட்டிநகர் கண்ணகி ஆலய வரலாறு (ஆய்வு) பண்டைய மட்டக்களப்பும் சங்கமன்கண்டி இறக்காவில் சிவாலயமும் திருக்கோவில் பிரதேச இலக்கிய வரலாறு பண்டைய ஈழத்தமிழர்          இவை தவிர ஏற்கனவே பதிவேற்றப்பட்டு நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதிருந்த “ஈழத்தமிழர் வரலாற்றுச்சுவடுகள்”… Continue reading எழுத்தாளர் கலாபூஷணம், திரு.நா.நவநாயகமூர்த்தி தமது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை அளித்துள்ளார்