நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

06 செப்டம்பர் 2024, வெள்ளிக்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து BHEEM MOVIES இனது Filmmaker, Photographer உம் இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கின்ற தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவரான ஆர்.ஆர். சீனிவாசன் இராமமூர்த்தி மற்றும் பாடலாசிரியர், பெண்ணிய ஆர்வலர், திரைப்பட இயக்குநர், சித்த மருத்துவர் என பன்முகங்களுடனும் சமகாலத்தில் எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராகவும் இயங்கிவருகின்ற குட்டி ரேவதி என அழைக்கப்படும் ரேவதி சுயம்புலிங்கம் ஆகியோர்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

03 செப்டம்பர் 2024, செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து ராஜ் சிவநாதன் வருகை தந்திருந்தார். இவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும் பார்வையிட்டார். மேலும், நிறுவனம்சார் ஆவணமாக்கலில் பாடசாலைகளை ஆவணப்படுத்துவது தொடர்பில் சில பாடசாலைகளை பரிந்துரை செய்ததுடன், நூலக… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வு – 2024

Published on Author Loashini Thiruchendooran

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வரலாற்றுத்துறையை சேர்ந்த 13 மாணவர்களின் உள்ளக பயிற்சி நிறைவின் இறுதி நாள் நிகழ்வு கடந்த 12.08.2024 திங்கட்கிழமை மாலை 2.30 மணிக்கு யாழ் சுண்டிக்குழியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி சாந்தினி அருளானந்தம் , வரலாற்றுத்துறையை சேர்ந்த 13 மாணவர்கள், நூலக நிறுவன பிரதம நிறைவேற்று அலுவலர், துறை சார் தலைவர்கள் மற்றும் நூலகப் பணியாளர்களும் கலந்துகொண்டனர். நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட… Continue reading யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வு – 2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

21 ஆகஸ்ட் 2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு அமெரிக்காவிலிருந்து Dr. சங்கரப்பிள்ளை மனோகரன் வருகை தந்திருந்தார். நிறுவனம் மற்றும் அதனது செயற்பாடுகள் சார்ந்து ஏற்கனவே நன்கறிந்த இவர், பல ஆவணங்களை நூலகத்தின் ஆவணப்படுத்தலுக்காக வழங்கியிருக்கிறார். குறிப்பாக, கடந்த 11.01.2024 அன்று நூலக அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த போது, இவரது தந்தை பொ. சங்கரப்பிள்ளை அவர்களது மெய்யியல், வரலாறு சார்ந்த “After Death”, “We Tamils”, “நாம் தமிழர்” ஆகிய நூல்களையும்,… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

20 ஆகஸ்ட் 2024, செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு நூலக நலன்விரும்பிகளாகவும் பங்களிப்பாளர்களாகவும் திகழ்கின்ற பத்மகரன் பத்மநாதன் (ஜேர்மனி), துஷாந்த் தெய்வேந்திரம் (அவுஸ்திரேலியா) ஆகியோர் வருகை தந்திருந்தனர். இவர்கள் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினர்.   இவர்களுள் துஷாந்த் என்பவர் அவுஸ்திரேலியா Chapter சார்ந்து 2022ஆம் ஆண்டில் இருந்தும் பத்மகரன் என்பவர்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளில் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini Thiruchendooran

ஆவணப்படுத்தலில் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்யவுள்ள நூலக நிறுவனத்தின் காட்சியறை, யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளும் காலை 10 மணி முதல் இரவு 8.00 மணி வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.       நூலக நிறுவனம் பற்றித் தெரிந்த பலரும் வருகை தந்திருந்ததுடன் நிறுவனத்தின் செயற்பாடுகள் சார்ந்து மேலதிக விடயங்களையும் கேட்டறிந்து கொண்டனர். குறிப்பாக பலரும் தங்களது பின்னூட்டல்களை வழங்கியிருந்த நிலையில், வலைத்தளத்தில் சேர்க்கும் படி சில விடயங்களையும் பரிந்துரை செய்திருந்தனர். குறிப்பாக, பள்ளிக்கூட… Continue reading 2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளில் “நூலக நிறுவனம்”

2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் இரண்டாவது நாளில் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini Thiruchendooran

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இன் இரண்டாவது நாளும், நூலக நிறுவனமானது ஆவணமாக்கல் முயற்சிகளை சமூகத்திற்கு அறியச் செய்யும் நோக்கில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. பெருமளவிலான சமூக ஆர்வலர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டிருந்ததுடன், நூலக நிறுவன காட்சியறையினையும் நேரடியாகப் பார்வையிட வந்திருந்தனர். வந்திருந்தோரில் அதிகமானோருக்கு நூலக நிறுவனம் மற்றும் www.noolaham.org வலைத்தளம் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தமை மகிழ்ச்சியளித்தது. மேலும், நூலக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே தேவையான ஆவணங்களை தரவிறக்கம் செய்து கல்வி மற்றும் ஆய்வுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதாகவும், “வாசிப்பிற்கும்… Continue reading 2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் இரண்டாவது நாளில் “நூலக நிறுவனம்”