2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் முதலாவது நாளில் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini Thiruchendooran

09.08.2024 அன்று காலை 10.00 மணி அளவில் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமான யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இல் நூலக நிறுவனமும் கலந்து கொண்டிருந்தது.   புத்தகத் திருவிழாவின் முதல் நாள், * பாடசாலை மாணவர்கள், * எழுத்தாளர்கள், * ஆய்வாளர்கள், * வாசகர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக நூலக நிறுவனத்தின் காட்சியறையில் 1900ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இதழ்கள், நூல்கள், பத்திரிகைகள் போன்ற சில அரிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.  … Continue reading 2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் முதலாவது நாளில் “நூலக நிறுவனம்”

2024 நெடுவூர்த் திருவிழாவில் நூலக நிறுவனம்

Published on Author Loashini Thiruchendooran

உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து, பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினது வாழ்வியலையும் மேம்படுத்தும் நோக்கில், “மீண்டும் ஊருக்கு போகலாம்” எனும் தொனிப்பொருளில், நெடுவூர்த் திருவிழா ஆகஸ்ட் 4 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டது. கண்காட்சி, புத்தக வெளியீடு, போட்டிகளும் பரிசளிப்பும், பாரம்பரிய விளையாட்டுக்கள், கொண்டாட்டங்கள் என பல்துறை சார்ந்த நிகழ்வுகளைக் கொண்ட இத்திருவிழாவில் கடந்த 7ஆம் திகதி நூலக நிறுவனப் பணியாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.  … Continue reading 2024 நெடுவூர்த் திருவிழாவில் நூலக நிறுவனம்

திருகோணமலை பிராந்திய ஆவணமாக்கலுக்கான வலுவூட்டல் கலந்துரையாடல்

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் பிராந்திய ஆவணமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியான திருகோணமலை பிராந்திய ஆவணப்படுத்தல் செயற்றிட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை பிராந்தியம் சார்ந்து காணப்படக்கூடிய மாவட்டத்தின் வரலாறு, அங்கு வாழும் மக்களின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், கலை கலாசாரக் கூறுகள், சமூகக் கட்டமைப்புக்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் போன்றனவற்றை ஆவணப்படுத்துவதை நோக்காகக் கொண்ட இச்செயற்றிட்டத்தை, நிதிப்பற்றாக்குறையால் இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இதன் தொடர்ச்சித் தன்மைக்கு ஆதரவளிக்கும் முகமாக கடந்த மாதம் 28 ஜூலை… Continue reading திருகோணமலை பிராந்திய ஆவணமாக்கலுக்கான வலுவூட்டல் கலந்துரையாடல்

நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டம்

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனம் பல்வேறு விதமான செயற்றிட்டங்களுக்கூடாக ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்களினுடைய ஆவணங்களை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. 2005 முதல் இன்று வரையான காலங்களில் நூலக நிறுவனம் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தலை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து வெளிவந்த ஆரம்ப கால பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக நாளாந்தம் தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தல் என்பது முக்கிய… Continue reading நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டம்

YGC புத்தாக்கத் திருவிழா 2024 இல் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini Thiruchendooran

ஆகஸ்ட் மாதம் 01, 02, 03 மற்றும் 04 ஆம் திகதிகளில்  காலை 9.00 மணிமுதல், யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற “YGC புத்தாக்கத் திருவிழா 2024” இல் நூலக நிறுவனமும் பங்குபற்றியது.  புத்தாக்க, தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மை அனைத்தும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமான இந்நிகழ்வில் நூலகத்தின் ஆவணப்படுத்தலில் புத்தாக்க, தொழில்நுட்பங்களின் பயன்பாடு எவ்வாறாக உள்வாங்கப்பட்டு இருக்கின்றது என்பது பற்றி சமூகத்திற்கு கொண்டு சேர்க்க இது ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. நூலக நிறுவனம் சார்பில்… Continue reading YGC புத்தாக்கத் திருவிழா 2024 இல் “நூலக நிறுவனம்”

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

20 ஜூலை 2024 , சனிக்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு இந்தியாவிலுள்ள Cognizant நிறுவனத்தின் EVP, Chairman and Managing Director ராஜேஷ் நம்பியார் , டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்கும் 99X தொழில்நுட்ப நிறுவனத்தின் Founder and Chairman மனோ சேகரம் , நூலக நிறுவனத்தின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு துறையின் Tech Infrastructure Management Process Mentor ராஜன் பாலா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.      … Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி அறிமுக நிகழ்வு – 2024

Published on Author Loashini Thiruchendooran

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வரலாற்றுத்துறையை சேர்ந்த 13 மாணவர்களின் உள்ளக பயிற்சிக்கான நூலக அறிமுக நிகழ்வு கடந்த 12.06.2024 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ் சுண்டிக்குழியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி சாந்தினி அருளானந்தம், வரலாற்றுத்துறையை சேர்ந்த 13 மாணவர்கள், நூலக நிறுவன பிரதம நிறைவேற்று அலுவலர், துறை சார் தலைவர்கள் மற்றும் நூலகப் பணியாளர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு நூலக நிறுவனம் பற்றிய தெளிவுப்படுத்தல்,… Continue reading யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி அறிமுக நிகழ்வு – 2024