நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 14.05.2024

Published on Author Loashini Thiruchendooran

14 மே 2024, செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு நோர்வேயிலிருந்து க. நிர்மலநாதன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி நிர்மலன் ஆகியோர் வருகைத் தந்திருந்தனர். இவர்கள் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினர்.      மேலும் நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதில், நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியைப் பாராட்டியதுடன், தென்மராட்சி… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 14.05.2024

நூலக செயற்றிட்ட பங்களிப்பாளர்: “மனித நேயம் அறக்கட்டளை”

Published on Author Loashini Thiruchendooran

எதிர்கால சந்ததியினரை அமைதி, வாய்ப்பு மற்றும் மகிழ்ச்சியின் உலகத்தை நோக்கி வழிநடத்தக்கூடிய வகையில் மனிதகுலத்தின் மீதான உலகளாவிய ஆர்வத்தையும் அன்பையும் பற்றவைப்பதை தூர நோக்காகக் கொண்ட மனித நேயம் அறக்கட்டளையின் ஆதரவிற்கு நூலக நிறுவனத்தின் நன்றிகள். குறிப்பாக “தேவைப்படுபவர்களுக்கு தொண்டு மற்றும் சமூக சேவைகளை வழங்குதல்” என்ற தன்னுடைய குறிக்கோளின் கீழ் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற… Continue reading நூலக செயற்றிட்ட பங்களிப்பாளர்: “மனித நேயம் அறக்கட்டளை”

நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாண பொதுசன நூலக எண்ணிமமாக்கற் செயற்றிட்டம்

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனம் பல்வேறு விதமான செயற்றிட்டங்களுக்கூடாக ஈழத்துத் தமிழ் பேசும்   சமூகங்களினுடைய ஆவணங்களை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. அவற்றுள் யாழ்ப்பாணம் பொது நூலகத்துடன் இணைந்து நூலக நிறுவனத்தினால் இதுவரை ஆவணப்படுத்தப்படாத பொதுநூலகத்திலுள்ள ஆவணங்களை, அனைவரும் பயனடையும் வகையில் ஆவணப்படுத்தி அவற்றை நீண்ட காலம் பாதுகாப்பதனை மையமாகக் கொண்டு, “யாழ்ப்பாணப் பொதுசன நூலக எண்ணிமமாக்கற் செயற்றிட்டம்” இனை 2022ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுச் செயற்றிட்டமாக ஆரம்பித்தது.   நோக்கம்: “பொதுசன நூலகத்திலுள்ள பத்திரிகைகள், சஞ்சிகைகள் உள்ளடங்களாக… Continue reading நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாண பொதுசன நூலக எண்ணிமமாக்கற் செயற்றிட்டம்

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 22.04.2024

Published on Author Loashini Thiruchendooran

22 ஏப்ரல் 2024, திங்கட்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு அமெரிக்காவிலிருந்து Dr. சங்கரப்பிள்ளை நாகேந்திரன் வருகை தந்திருந்தார். இவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும் பார்வையிட்டார்.     மேலும் நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதில், “நூலகத்தின் வட… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 22.04.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 18.04.2024

Published on Author Loashini Thiruchendooran

18 ஏப்ரல் 2024, வியாழக்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட புவியியற்றுறையின் திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரான திட்டமிடலாளர் செல்வராஜா ரவீந்திரன் மற்றும் இராசலிங்கம் மங்களேஸ்வரன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். இவர்கள் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், செல்வராஜா ரவீந்திரன் நூலகத்தின் அரிதான ஆவணங்கள் மற்றும் எண்ணிமப்படுத்தும் முறைகள் எண்ணிம சாதனங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தினர். குறிப்பாக, தனது கலாநிதி கற்கைக்காக இலங்கையின் வடமாகாணத்தின்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 18.04.2024

கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்.

Published on Author Loashini Thiruchendooran

கடந்த 18.04.2024 அன்று காலமான கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களுக்கு நூலக நிறுவனம் சார்பான அஞ்சலிகள். யாழ்ப்பாண மாவட்டம், பெரியவிளான் என்ற ஊரில் பிறந்த இவர், இலங்கை, சியேரா லியோனி, பப்புவா நியூ கினி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றியதுடன் யுனெஸ்கோவிலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.  1994 முதல் இலங்கையின் வடக்குக் கிழக்கில் பல தன்னார்வப் பணிகளை மேற்கொண்டு வந்ததுடன் 1998-99 காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண சபையிலும், பின்னர் 2010 இல் வட… Continue reading கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களின் படைப்புக்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்.

என்றும் எரிக்க முடியாத மின் அலை நூலகம் – 2024

Published on Author Loashini Thiruchendooran

வாசிப்பு, வெளியீடு மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு “சர்வதேச புத்தக தினம்”. புத்தகங்களைப் படிக்க மக்களை ஊக்குவிப்பதையும், வெளியீட்டை ஊக்குவிப்பதையும், எழுத்தறிவை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு   எல்லா வயதினரும்  புத்தகங்களுடன் இணைவதற்கு  வழிகளைக் கண்டறிய ஊக்குவிக்கும் வகையில் “உங்கள் வழியைப் படியுங்கள்” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.  உலகின்… Continue reading என்றும் எரிக்க முடியாத மின் அலை நூலகம் – 2024